ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

1970-யை சேர்ந்த இந்த படத்தில் எதிர்காலத்தில் இருந்து வந்தவர் யார்? 9 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

1970-யை சேர்ந்த இந்த படத்தில் எதிர்காலத்தில் இருந்து வந்தவர் யார்? 9 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

பிரெயின் டீசர்

பிரெயின் டீசர்

Brain Teaser | 1970 காலக்கட்டத்தைச் சேர்ந்த போட்டோவிற்குள், மறைந்திருக்கும் எதிர்காலத்தைச் சேர்ந்த நபரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற பிரெயின் டீசர் புதிரைத் தான் இன்று உங்களுக்கு கொண்டுவந்துள்ளோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணையத்தில் சுவாரஸ்யமான பிரெயின் டீசர் மற்றும் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு எப்போதுமே மவுசு குறைவது இல்லை. ஏனெனில் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உங்களுடைய ஆளுமை திறமைகளை கண்டறிய பயன்பட்டால், பிரெயின் டீசர்கள் நீங்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் உங்கள் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. இந்த புதிர்கள் சிக்கலை விரைவாக கண்டறிந்து, பகுத்தறிவுத் திறனைப் பயன்படுத்தி பதிலை பெற உதவுகிறது. எனவே தான் பிரெயின் டீசர்கள், வேடிக்கையான IQ சோதனைகளை ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் தீர்க்கக்கூடிய சுவாரஸ்யமான புதிராக மாற்றுகின்றன.

இந்த முறை எல்லாத்தையும் விட அட்வான்ஸான பிரெயின் டீசர் புதிரைக் கொண்டு வந்துள்ளோம். 1970 காலக்கட்டத்தைச் சேர்ந்த போட்டோவிற்குள், மறைந்திருக்கும் எதிர்காலத்தைச் சேர்ந்த நபரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற புதிர் தான் அது.

9 விநாடிகளில் புதிரைக் கண்டுபிடிக்க முடியுமா.?

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். அவர்களுடைய உடை, ஸ்டைல், வீட்டு உபயோக பொருட்களைப் பார்க்கும் போதே பழங்காலம் என்பது தெரிந்திருக்கும். ஆம், நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 1970களில் ஒரு வீட்டில் பார்ட்டி நடப்பது போன்ற புகைப்படத்தை ஆகும். நடுவில் டிஸ்கோ லைட் பந்து தொங்கும் அறையில் வித்தியாசமான உடை மற்றும் வேடிக்கையான சிகை அலங்காரத்துடன் ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். பெல்பாட்டம் பேண்ட், அடர்த்தியான மீசை மற்றும் தலைமுடியுடன் ஆண்களும், குட்டையான கூந்தல், தளர்வான ஜீன்ஸ் அல்லது ஸ்கர்ட் அணிந்த பெண்களும் உள்ளனர்.

இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு தொடர்பே இல்லாத எதிர்காலத்தைச் சேர்ந்த நவநாகரீகமான ஒருவர் மறைந்து கொண்டிருக்கிறார். அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 9 விநாடிகள் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் புதிரைக் கண்டுபிடிக்க மூளையை தட்டிவிடுங்கள். இந்த புதிருக்கான விடை மிகவும் எளிதானது என்ற குறிப்பையும் உங்களுக்கு தருகிறோம்.

Also Read : கொலை செய்தது யாரென்று கண்டுபிடியுங்கள் - நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று பார்க்கலாம்.!

பிரெயின் டீசர் விடை:

அறையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள் மற்றும் அணிகலன்களை கவனமாகப் பார்த்தலே போதும், 1970ம் ஆண்டைச் சாராத மற்றும் எதிர்காலத்தைச் சேர்ந்த நபரை நீங்கள் ஈசியாக அடையாளம் காணாலாம். நேரம் முடிந்த பிறகும் புதிரைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டும். விடை இதோ..

Also Read : கணவரின் ஆசைக்காக திருநங்கையை திருமணம் செய்து வைத்த மனைவி - வியப்பில் நெட்டிசன்கள்.!

புகைப்படத்தின் வலது மூலையில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட் அணிந்து கொண்டு பெண்ணுடன் உரையாடிக்கொண்டிருக்கும் நபரை உற்று நோக்குங்கள். அவர் தான் எதிர்காலத்தில் இருந்து வந்தவர். உடை மற்றும் சிகை அலங்காரத்தை வைத்து நீங்கள் இதைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அவர் பாக்கெட்டில் 1970களில் இல்லாத செல்போன் இருப்பதை கவனித்திருந்தாலே விடையை எளிதாக கண்டுபிடித்திருக்கலாம்.

இந்த பிரெயின் டீஸர் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கண்காணிப்புத் திறனை கண்டறிய உதவும் எளிமையான சோதனையாகும். எனவே இந்த புதிருக்கான விடையை 9 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், உங்களின் புலனாய்வு திறனை நினைத்து நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். நீங்கள் 1970ம் ஆண்டு நடக்கும் பார்ட்டியில் எதிர்காலத்தில் இருந்து வரும் நபரை நீங்கள் கண்டுபிடித்தீர்களா? என்பதை கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending