ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மூளையை குழம்ப வைக்கும் இந்த கணித புதிர்....உங்களால் தீர்க்க முடியுமா?

மூளையை குழம்ப வைக்கும் இந்த கணித புதிர்....உங்களால் தீர்க்க முடியுமா?

முடிந்தால் கண்டுபிடிங்க!

முடிந்தால் கண்டுபிடிங்க!

Optical Illusion | பார்ப்பதற்கு எளிதில் தீர்க்க முடியாத புதிர்கள் போல் தோன்றினாலும், அவற்றை புரிந்து கொண்டு விடையை கண்டுபிடித்து விட்டால் இதற்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என ஈசியாக தோன்றும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

படிக்கும் போது பலருக்கும் சற்று சிக்கலான அதே சமயம் சுவாரசியமான பாடமாக கணிதம் இருந்திருக்கும். கணித பாடம் பலருக்கும் பிடிக்கும் என்றாலும், சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். கணிதத்தை பிடிக்காத அனைவரும் ட்ரினோமெட்ரி, கால்குலஸ் உள்ளிட்டவற்றை வளர்ந்த பிறகு வாழ்க்கையில் நாம் எங்கே பயன்படுத்த போகிறோம் என்று ஒருமுறையாவது யோசித்திருப்பார்கள்.

கணித புதிர்களுக்கான விடையை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்கு எளிதில் தீர்க்க முடியாத புதிர்கள் போல் தோன்றினாலும், அவற்றை புரிந்து கொண்டு விடையை கண்டுபிடித்து விட்டால் இதற்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என ஈசியாக தோன்றும். சரி இப்போது உங்கள் கணித அறிவை பரிசோதிக்கும் புதிரை இங்கே பார்க்கலாம்.

கீழே நீங்கள் பார்க்க போகும் கணித புதிர் ஈக்குவேஷன்களை அடிப்படையாக கொண்டது. படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒதுக்கப்பட்ட நம்பர்களை கணக்கிடுவதன் மூலம் அதை நீங்கள் இந்த சவாலுக்கான விடையை உறுதிப்படுத்த வேண்டும். ஆம், இந்த புதிருக்கான விடையும் கொடுக்கப்பட்டு விட்டது. முதலில் கீழே உள்ள இமேஜை பாருங்கள்.

மேலே உள்ள கணித புதிருக்கான சரியான விடை 16 என்பதே. எனவே உங்களது விடை 16-ஐ தவிர வேறு எதுவாக இருந்தாலும் அது தவறு தான். சரி இப்பொது படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 3 பொருட்கள் என்ன, அவற்றுக்கான மதிப்பு என்ன என்பதை இப்போது பார்க்கலாம். மேலே உள்ள இமேஜில் ஷூக்கள், பூனைகள் மற்றும் விசில்கள் உள்ளன. இதில் ஷூக்களை x என்றும், பூனை உருவங்களை y என்றும், விசில்களை z என்றும் வைத்து கொள்வோம்.

Read More : மகுடிக்கு மயங்காத பாம்பு.. 8 வினாடிகளில் இந்த படத்தில் இருக்கும் பாம்பை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

மேலே மொத்தம் 4 ஈக்குவேஷன்கள் இருக்கின்றன. அவற்றின் மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி முதல் ஈக்குவேஷன் x + x + x = 30 என கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது X + y + y = 20 எனவும், மூன்றாவது Y + 2z + 2z = 13 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. 2z என்பது 2 விசில்கள் இருப்பதை குறிக்கிறது. இதன்படி x-ன் மதிப்பு 10, y-ன் மதிப்பு 5 ஆகும். ஆனால் மூன்றாவது கொடுக்கப்பட்டிருக்கும் 5 + 4z = 13 ஈக்குவேஷனில் 4z = 8 ஆகும். அப்படி என்றால் z-ஆக உள்ள விசிலின் மதிப்பு 2. நான்காவதாக உள்ள ஈக்குவேஷன் தான் உங்களுக்கு விடுக்கப்பட்ட சவால். இதில் x, y மற்றும் z-ன் மதிப்புகளை மாற்ற வேண்டும்.

X + y x z =?

இதன்படி 10 + (5 x 2) என்று நீங்கள் கணிக்கிட்டு டோட்டல் 20 என்று நீங்கள் சொல்ல கூடும். ஆனால் சரியான விடை 16. எப்படி என்று நீங்கள் நீண்ட நேரம் மண்டையை உடைத்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதற்கான ட்ரிக்கி பதில் நீங்கள் மீண்டும் மேலே சென்று புதிர் இமேஜை ஒருமுறை நன்றாக உற்று பாருங்கள்.

இப்போதும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இதோ விடை சொல்கிறோம். மேலே உள்ள 2 மற்றும் 3-ஆவது ஈக்குவேஷனில் உள்ள பூனை உருவத்தின் கழுத்தில் விசில் உள்ளது பாருங்கள். ஆனால் நீங்கள் விடை கண்டுபிடிக்க வேண்டிய ஈக்குவேஷனில் உள்ள பூனை உருவத்தின் கழுத்தில் விசில் இல்லை. எனவே இப்போது இதற்கான விடையை சரியாக உறுதி செய்ய கடைசி ஈக்குவேஷனை நீங்கள் x + (y - z) x z-ஆக மாற்ற வேண்டும். இதன்படி இப்போது நீங்கள் ஈக்குவேஷனை 10 + (5 - 2) x 2 இப்படி மாற்ற வேண்டும்.

இப்போது பாருங்கள் 10 + 6=16. உண்மையிலேயே இது ஒரு கடினமான கணித புதிர் தான் அல்லவா..!

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Optical Illusion, Trending, Viral