ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மூளைக்கு வேலை.. இந்த போட்டோவில் ஒளிந்திருக்கும் தவறைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 

மூளைக்கு வேலை.. இந்த போட்டோவில் ஒளிந்திருக்கும் தவறைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 

மூளைக்கு வேலை

மூளைக்கு வேலை

Optical Illusion | புதிர் போட்டிகளையும், குறுக்கெழுத்து, வினாடி - வினா, இருவேறு படங்களுக்குள் 6 வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது என சுவாரஸ்யமான விஷயத்தை தேடித் தேடி தீர்க்கும் புதிர் பிரியர்களுக்கு, ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீசர்கள் சரியான சவாலாக அமைந்துள்ளது

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காலையில் பேப்பர் அல்லது வாரமலர் என எதை திறந்தாலும் புதிர் போட்டிகளையும், குறுக்கெழுத்து, வினாடி - வினா, இருவேறு படங்களுக்குள் 6 வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது என சுவாரஸ்யமான விஷயத்தை தேடித் தேடி தீர்க்கும் புதிர் பிரியர்களுக்கு, ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீசர்கள் சரியான சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக பிரெயின் டீசர்கள், குறிப்பிட்ட விஷயத்தில் மூளை வித்தியாசமாக செயல்பட்டு, அதனை பகுத்தறிய உதவுகிறது.

  ஆப்டிக்கல் இல்யூஷன்கள் போல் அல்லாமல், பிரெயின் டீசர்கள் எதையும் ஒரு குறுகிய வட்டத்திற்கு சிந்திக்காமல் அவுட் ஆப் தி பாக்ஸ் சிந்தனையை தூண்டவும், சிக்கலான புதிரை வித்தியாசமாக சிந்தித்து தீர்க்கவும் உதவுகிறது.

  ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உங்களுடைய ஆளுமை திறமைகளை கண்டறியப் பயன்பட்டால், பிரெயின் டீசர்கள் நீங்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் உங்கள் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. இந்த புதிர்கள் சிக்கலை விரைவாக கண்டறிந்து, பகுத்தறிவுத் திறனைப் பயன்படுத்தி பதிலை பெற உதவுகிறது. எனவே தான் பிரெயின் டீசர்கள், வேடிக்கையான IQ சோதனைகளை ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் தீர்க்கக்கூடிய சுவாரஸ்யமான புதிராக மாற்றுகின்றன.

  Read More : பாவம் இந்த முதியவருக்கு அவரது மனைவியை கண்டுபிடிக்க உதவ முடியுமா.?

  அதனால் தான் இந்த முறை உங்களது கண்ணுக்கும், மூளைக்கும் கடுமையாக வேலை கொடுக்கக்கூடிய வித்தியாசமான பிரெயின் டீசர் புதிரை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

  போட்டோவில் உள்ள தவறு என்ன?

  மேலே உள்ள படத்தில், தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் பனிக்கட்டி மீது பனிக்கரடியும், சில பென்குயின்களும் நிற்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பனிக்கரடி, பென்குயின் இரண்டுமே குளிர்ச்சியான பகுதிகளில், கடலுக்கு அருகில் வசிக்கக்கூடியவை என்றாலும் தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் படத்தில் ஒரு தவறு மறைந்துள்ளது. அதனை 9 விநாடிகளுக்குள் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? என்பது தான் இன்றைய சவால்.

  படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்... பனிக்கரடி மற்றும் பென்குயின் இடையே மறைந்திருக்கும் தவறு என்ன என்பதை 9 விநாடிகளுக்குள் கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் விடையைத் தெரிவிக்கலாம்.

  9 விநாடிகள் ஆன பிறகும் விடை தெரியாமல் விழிப்பவர்களுக்கு, இது பனிக்கரடி மற்றும் பென்குயினின் வாழ்விடம் சம்பந்தப்பட்டது என்ற ஒரு குறிப்பையும் தருகிறோம். பார்க்க எளிமையாக இருந்தாலும், இந்த பிரெயின் டீசருக்கான விடை மிகவும் தந்திரமானது ஆகும். ஏனெனில் உங்கள் கவனம் முழுவதும் பனிக்கரடி மற்றும் பென்குயினின் உருவத்தின் மீது தான் இருக்கும், ஆனால் பலரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று புகைப்படத்தில் மறைந்துள்ளது.

  விடை என்னத் தெரியுமா?

  டைம் முடிந்துவிட்டது... விடையைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்...

  பனிக்கரடி வாழ்விடம்: துருவ கரடிகள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்துக் காணப்படும் ஆர்டிக் கடல் பகுதியை ஒட்டி வசித்து வருகின்றனர். அது வட துருவத்தில் அமைந்துள்ளது.

  பென்குயின் வாழ்விடம்: பென்குயின்கள் தென் துருவத்தில் அமைந்துள்ள பெருங்கடல்கள், கடற்கரைகள், தீவுகளில் வசிக்கக்கூடியவை ஆகும்.

  இப்படி எதிர், எதிர் துருவத்தைச் சேர்ந்த 2 உயிரினங்கள் ஒரே இடத்தில் வசிப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது தான் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள தவறாகும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Optical Illusion, Trending, Viral