காதலைச் சொல்ல 6 மாத உழைப்பில் ஒரு திரைப்படத்தையே உருவாக்கிய காதலன்!- வீடியோ

6 மாத கால உழைப்பில் தன் நண்பர்களுடன் இணைந்து இத்திரைப்படத்தை லீ உருவாக்கியுள்ளது அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

காதலைச் சொல்ல 6 மாத உழைப்பில் ஒரு திரைப்படத்தையே உருவாக்கிய காதலன்!- வீடியோ
Lee Loechler / YouTube
  • News18
  • Last Updated: January 10, 2020, 5:12 PM IST
  • Share this:
காதலியிடம் தன்னுடைய காதலைச் சொல்ல 6 மாத கால உழைப்பில் ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளார் காதலர் ஒருவர்.

லீ லொக்லர் என்பவர் தனது நீண்ட நாள் தோழியிடம் தன் காதலைப் பகிர விரும்பியுள்ளார். தன் தோழி சுதுதி-க்குப் பிடித்தமான Sleeping Beauty என்னும் திரைப்படத்தின் அனிமேஷன் வெர்ஷனல் தன்னையும் தன் காதலியையும் நாயகர்களாக வடிவமைத்து அத்திரைப்படத்தை ஒரு திரையரங்கிலும் வெளியிட ஏற்பாடு செய்தார்.

திரையரங்கம் முழுவதும் தன் உறவினர்களையும், நண்பர்களையும் பார்வையாளராக அமரச் செய்தார் லீ. தன் தோழி உடன் அத்திரைப்படத்தைக் காண வந்தவர் அதில் வரும் காட்சியை ஒத்து தன் தோழி சுதுதியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.


சுதுதியும் லீ-யின் காதலை ஏற்றுக்கொண்டார். அந்த காதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலைப் பரிமாற 6 மாத கால உழைப்பில் தன் நண்பர்களுடன் இணைந்து இத்திரைப்படத்தை லீ உருவாக்கியுள்ளது அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும் பார்க்க: விவாகரத்து அழைப்பிதழ்- பந்தாவான இந்தியத் திருமணங்களை கலாய்க்கும் ஓவியர்...!
First published: January 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்