ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சாக்லேட்டில் மாட்டிறைச்சி கலப்பு? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ’காட்பரி’ டைரி மில்க்!

சாக்லேட்டில் மாட்டிறைச்சி கலப்பு? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ’காட்பரி’ டைரி மில்க்!

காட்பரி

காட்பரி

Boycottcadbury : உலகின் முக்கிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான கார்பரியை இந்தியாவில் தடைசெய்யக் கோரி சமூக வலைத்தளமான டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகைக்காக காட்பரி வெளியிட்ட விளம்பரமும், காட்பரி சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்துவதாகக் கூறப்படும் மாட்டு இறைச்சியும்தான் தற்போது 30,000 மேல் ட்விட்களுடன் #பாய்காட் காட்பரி ட்ரெண்டாவதற்கு காரணமாகவுள்ளது.

  தீபாவளி பண்டிகைக்காக காட்பரி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தை வெளியிட்டனர். அதில் தெருவோரத்தில் விளக்கு விற்பனை செய்யும் நபர் ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் காட்பரி சாக்லேட் பரிசு பெட்டியை வழங்குவார். மேலும் அதில் உள்ள QR code மூலம் அருகில் உள்ள வாடிக்கையாளர்களை விற்பனையாளர்களுடன் இணைக்கும் காட்பரியின் shop for shopless என்ற புதிய திட்டத்தையும் விளம்பரப்படுத்துவர்.

  இந்த விளம்பரத்தில் தெருவில் விளக்கு விற்பனை செய்யும் வியாபாரியின் பெயர் தாமோதர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் காட்பரி நிறுவனம், பிரதமரின் தந்தை பெயரான தாமோதர் என்ற பெயரை வேண்டுமென்றே உபயோகப்படுத்தியுள்ளனர் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பேசத் தொடங்கினர்.

  பின்னர், விஸ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி, காட்பரியின் விளம்பரத்தைப் பதிவு செய்து அதில் பிரதமரின் தந்தையின் பெயரை இருளில் உள்ள கடைக்காரராகக் காட்டுவதற்காகவே வெளியிடப்பட்டது என்று குற்றம் சாட்டி கூறினார். மேலும் #Boycottcadbury என்ற ஹாஸ்டாக்கை இணைத்துப் பதிவு செய்துள்ளார்.

  Also Read : ”லேப்டாப் அழுக்காக இருக்குப்பா” தண்ணீர் ஊற்றி கழுவிய சிறுமி - வீடியோ இணையத்தில் வைரல்!

  அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #Boycottcadbury வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் தாயார் செய்யும் காட்பரியில் மாட்டு இறைச்சி இருப்பதாகக் கூறி பரலாகப் பேசப்பட்டது. அதற்கு காட்பரி நிறுவனத்திடம் இருந்து இந்தியாவில் சாக்லேட் சைவ முறையில் தான் தாயார் செய்யப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது அதனுடன் இணைந்து மாட்டு இறைச்சி வதந்தியும் ட்ரெண்டாகி வருகிறது.

  காட்பரி சாக்லேட் சர்ச்சை

  நெட்டிசன்கள் பலர் காட்பரி சாக்லேட்டில் மாட்டு இறைச்சி உள்ளது என்று வேறு நாட்டில் அளிக்கப்பட்ட தகவலின் புகைப்படங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Chocolate, Trending, Twitter