• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • போப் அணிந்திருந்த தொப்பியை எடுக்க முயன்ற சிறுவன்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

போப் அணிந்திருந்த தொப்பியை எடுக்க முயன்ற சிறுவன்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

போப்

போப்

போப் ஃப்ரான்சிஸ் அணிந்திருந்த பாபெல் தொப்பியை எடுக்க முயன்ற சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • Share this:
    இத்தாலியின் வாடிகன் நகரில் பொது மக்கள் பங்கேற்கும் மத நிகழ்வில் ஃபோப் பிரான்சிஸ் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்வில் போப் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபர் மதப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அப்போது மேடையில் ஏறிய 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் போப் ஃப்ரான்சிஸுக்கு அருகில் சென்று அவர் தலையில் அணிந்திருந்த பாபெல் தொப்பியை எடுக்க முயன்றான். தொடர்ந்து ஐந்து தடவை வரையில் போப்பிடமிருந்து அந்தத் தொப்பியை சிறுவன் எடுக்க முயன்றான்.


    போப்பும் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்தச் சிறுவனின் செய்கையால் அரங்கில் கூடியிருந்த மக்கள் பலரும் வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. பலரும் சிறுவனின் செயலுக்கு சபாஷ் தெரிவித்துவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: