தடுத்து நிறுத்தி செல்பி எடுத்த சிறுவன்! தட்டிக்கொடுத்த மோடி, கை கொடுத்த ட்ரம்ப்

அந்த விழாவில் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இணைந்து பிரதமர் விழா அரங்கிற்கு வந்ததும், மோடி என முழக்கமிட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தடுத்து நிறுத்தி செல்பி எடுத்த சிறுவன்! தட்டிக்கொடுத்த மோடி, கை கொடுத்த ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்,
  • News18
  • Last Updated: September 23, 2019, 5:21 PM IST
  • Share this:
அமெரிக்காவில் ’ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மோடியையும், ட்ரம்பையும் தடுத்து நிறுத்தி சிறுவன் ஒருவன் செல்பி எடுத்தான். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

பிரதமர் மோடி ஒருவார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்து பேசினார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்குள்ள என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நலமா மோடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது, மோடியை வரவேற்கும் விதமாக பரதநாட்டியம், குச்சிப்புடி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய கலச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களும், அமெரிக்காவின் நடன நிகழ்ச்சிகளும் வண்ணமயமாக நடைபெற்றன. அந்த விழாவில் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இணைந்து பிரதமர் விழா அரங்கிற்கு வந்ததும், மோடி என முழக்கமிட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.மோடியும், ட்ரம்ப்பும் இணைந்து மேடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் ட்ரம்ப், மோடியை நோக்கி ஓடி வந்து செல்பி எடுக்கக் கோரினர். உடனே, ட்ரம்பும், மோடியும் சேர்ந்து சிறுவனுடன் சேர்ந்து செல்பி எடுத்தனர். அந்த செல்பியும், செல்பி எடுக்கும் வீடியோ நிகழ்வும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Also see:
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்