ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ராஜநாகத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய சிறுவன் - மிரள வைக்கும் வீடியோ

ராஜநாகத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய சிறுவன் - மிரள வைக்கும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | இளம்கன்று பயம் அறியாது என்பது போல் ராஜநாகத்தையே வெறும் கைகளால் பிடிக்க அந்த சிறுவனின் துணிச்சல் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைதளத்தில் பார்த்து இருப்போம். பாம்பு பிடிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அதில் சிறப்பாக செயல்பட முடியும். சற்று தவறினாலும் அது உயிருக்கே ஆபத்தாகி விடும். சில சமயங்களில் எப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த பாம்பு பிடிப்பவர்களும் பாம்பு கடியில் சிக்கி மரணமடைந்த செய்திகளையும் நாம் கேட்டிருப்போம்.

  பாம்பு இனத்தில் மிகவும் விஷம் கொண்ட பாம்பு என்றால் அது ராஜநாகம் தான். கடித்த உடன் ரத்தம் உறைந்து கடிப்பட்டவர்கள் நொடியில் மரணத்தை சந்திப்பார்கள். அப்படிப்பட்ட ராஜநாகத்தை சிறுவன் ஒருவன் அசால்ட்டாக வெறும் கைகளால் பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.

  Also Read : தாய் பாசத்தில் ராகுலை மிஞ்ச ஆளே இல்லை - காங்கிரஸ் யாத்திரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

  அந்த வீடியோவில் சிறுவன் சாலையில் போகும் ராஜநாகத்தை பிடிக்க முயற்சிக்கின்றார். சிறுவனின் பிடியிலிருந்து தப்பிக்க நாகம் வேகமாக செல்கிறது. ராஜநாகத்தை பின்தொடர்ந்து செல்லும் சிறுவன் அதன் வாலைபிடித்து நிறுத்தி அதன் தலை மீது மெல்ல கைவைத்து நொடியில் அதனை பிடித்து விடுகின்றான். இளம்கன்று பயம் அறியாது என்பது போல் ராஜநாகத்தையே வெறும் கைகளால் பிடிக்க அந்த சிறுவனின் துணிச்சல் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.


  இன்ஸ்டாகிராமில் Animals in the nature today என்ற பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 3000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளது. பலர் இந்த வீடியோவிற்கு கலவையான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே விஷபாம்புகளை பிடிக்க முடியும் என்பதை எப்போதும் நினவைில் கொள்ள வேண்டும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral