Home /News /trend /

இறந்த பின்னரும் பாம்பினை துன்புறுத்தி ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ

இறந்த பின்னரும் பாம்பினை துன்புறுத்தி ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டு பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்து கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார். வீடியோவின் பின்னணியில் பலரும் இளைஞர் செயலுக்கு சிரித்து கொண்டு நகைக்கும் படி ஊக்குவிக்கும் குரல் வீடியோவில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நன்கு வளர்ந்த பாம்பினை இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடி தன் மகிழ்வை போக்கி தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பாம்பு இறந்த நிலையில் உள்ளது. இது குறித்து இணையத்தில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோவில் இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டு பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்து கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார். வீடியோவின் பின்னணியில் பலரும் இளைஞர் செயலுக்கு சிரித்து கொண்டு நகைக்கும் படி வீடியோவில் உள்ளது.



    மும்பையை ஒட்டியுள்ள பால்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறுவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே போன்று வியட்நாமில் சிறுவர்கள் இறந்த நீளமான பாம்பை பிடித்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ வைரலாகப் பரவியது.



    அந்த வீடியோவில் சிறுவர்கள் மூவரும் சாதாரணமாக இறந்த பாம்பை சுற்றி ஸ்கிப்பிங் விளையாடுகிறார்கள். அதை வீடியோ எடுக்கும் பெண்ணும் அவர்களை கண்டிக்காமல் ஊக்குவிக்கும் குரல் ஒலிக்கின்றது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி