• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஊழியர்களுக்கு தலா 10,000 டாலர், ஃப்ளைட் டிக்கெட்ஸ் - அசத்தல் போனஸை அறிவித்த முதலாளி!

ஊழியர்களுக்கு தலா 10,000 டாலர், ஃப்ளைட் டிக்கெட்ஸ் - அசத்தல் போனஸை அறிவித்த முதலாளி!

அசத்தல் போனஸை அறிவித்த முதலாளி

அசத்தல் போனஸை அறிவித்த முதலாளி

இதற்கான காரணம் என்னெவென்றால், முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் சமீபத்தில் Spanx-ன் பெரும்பான்மையான பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கி கொண்டது.

  • Share this:
நம்மில் பெரும்பாலானோர் ஒரு முதலாளி நடத்தும் நிறுவனத்தின் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களாக தான் இருந்து வருகிறோம். இந்த உலகத்தில் இருக்கும் முதலாளிகளை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம். நம் வேலை திறனை பார்த்து ஊக்குவிக்கும் மற்றும் உத்வேகம் கொடுப்பவர்கள் முதல் வகை முதலாளிகள். என்ன தான் வேலை செய்தாலும் அதில் திருப்தி அடையாமல் குறை மட்டுமே கண்டுபிடிக்கும் முதலாளிகள் இரண்டாம் வகை. மூன்றாம் வகை முதலாளிகள் தொழிலாளர்களின் போற்றுதலுக்கு உரியவர்கள்.

தங்களின் கருணை மற்றும் பெருந்தன்மையால் தொழிலாளர்களை ஆச்சரியப்படுத்தும் மூன்றாம் வகை முதலாளிகள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள். இந்த மூன்றாம் வகையை சேர்ந்த ஒரு முதலாளி தான் சாரா பிளேக்லி (Sara Blakely). தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் பெரிய பரிசுகளை வழங்கி உள்ளதற்காக 'உலகின் சிறந்த முதலாளி' என்று தற்போது குறிப்பிடப்படுகிறார் சாரா பிளேக்லி. ஷேப்வேர் நிறுவனமான (உள்ளாடை நிறுவனம்) Spanx-ன் தலைமை நிர்வாகி மற்றும் நிறுவனரான சாரா பிளேக்லி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தலா 10,000 டாலர் பணம் (இந்திய மதிப்பில் சுமார் ஏழரை லட்சம் ரூபாய் ) மற்றும் 2 ஃபர்ஸ்ட் கிளாஸ் ஃப்ளைட் டிக்கெட் உள்ளிட்ட பரிசுகளை போனஸாக வழங்கி அவர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தி இருக்கிறார்.

இதற்கான காரணம் என்னெவென்றால், முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் சமீபத்தில் Spanx-ன் பெரும்பான்மையான பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கி கொண்டது.சாரா பிளேக்லியின் நிறுவனமான Spanx- நிறுவனத்தின் ஸ்டாக்குகளை சுமார்1.2 பில்லியன் டாலர் கொடுத்து பிளாக்ஸ்டோன் வாங்கி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த சாரா பிளேக்லி, பெரும்பாலான பங்குகளை வாங்கிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுடன் ஷேப்வேர் நிறுவனத்தின் புதிய ஒப்பந்தத்தை தொடர்ந்து தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

Also read... 3.5 கோடி ரூபாய் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் - ரிக்ஷா ஓட்டுநர் அதிர்ச்சி!

இது தொடர்பான நிகழ்வில் ஊழியர்களிடம் பேசிய அவர் உங்களால் தான் எனது 21 வருட வெற்றி சாத்தியமாகி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் Spanx நிறுவனத்தி வெறும் 5000 டாலர் சேவிங்க்ஸுடன் தொடங்கிய போது, நிறுவனத்தை ஒருநாள் 20 மில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்றி காட்டுவேன் என்று கூறினேன் பலரும் சிரித்தார்கள். ஆனால் இப்போது தனியார் பங்கு நிறுவனமான பிளாக்ஸ்டோன் நம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கி இருக்கிறது.

எனவே ஒவ்வொரு பணியாளரும் இந்த தருணத்தை தங்கள் சொந்த வழியில் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். உலகில் எந்த பகுதிக்கும் செல்லும் வகையில் தலா 2 ஃபர்ஸ்ட் கிளாஸ் விமான டிக்கெட்டுகளும், டூர் செலவிற்காக 10,000 டாலர் நிதியும் உங்களுக்கு போனஸாக வழங்கப்படும் என்ற அவரின் அறிவிப்பை கேட்டு ஊழியர்கள் ஆரவாரத்துடன் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: