மாடுகள் இல்லாமல் மகள்களைப் பயன்படுத்தி நிலத்தை உழுத ஏழை விவசாயி- ட்ராக்டர் வாங்கிக் கொடுக்க முன்வந்த சோனு சூட்

ஆந்திராவில் உழுவதற்கு மாடுகள் இல்லாத நிலையில், மகள்களைப் பயன்படுத்தி நிலத்தை உழுத விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கிகொடுக்க முயற்சி எடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

மாடுகள் இல்லாமல் மகள்களைப் பயன்படுத்தி நிலத்தை உழுத ஏழை விவசாயி- ட்ராக்டர் வாங்கிக் கொடுக்க முன்வந்த சோனு சூட்
சோனு சூட்
  • Share this:
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ். தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். கொரோனா கஷ்டகாலம் காரணமாக ஏற்கனவே விளைவித்த தக்காளியை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டு நஷ்டத்தை சந்தித்தார். இதனால் மீண்டும் தக்காளி பயிரிட முடிவு செய்து ஏற்பாடுகளை செய்தபோது கையில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே நிலத்தை உழுவதற்கு மாடு, கலப்பை ஆகியவற்றுடன் கூடியவரை வரவழைத்தால் கொடுக்க அவரிடம் பணம் இல்லை.

எனவே வேறு வழி இல்லாத நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களையும் மாடுகள் போல் பயன்படுத்தி நிலத்தை சீர் செய்தார் அந்த விவசாயி. அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் வயதுக்கு வந்த மகள்களை பயன்படுத்தி நிலத்தை உழுத விவசாயி நாகேஸ்வர ராவை கண்டித்தனர்.

ஆனால் தாய்க்கு சமமான நிலத்தை இதுபோல் உழுவது தவறு கிடையாது என்று அவர் கூறிவிட்டார். மாடுகளுக்கு பதிலாக மகள்களை கட்டி நிலம் உழுத விவசாயி பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
இதனை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் நாளைக்குள் அந்த விவசாயிக்கு மாடுகள் கிடைத்துவிடும் என்று ட்விட் செய்துள்ளார்.
மேலும் மாடுகளுக்கு பதிலாக நிலத்தை உழுத இரண்டு பெண்களும் தங்கள் கவனத்தை படிப்பில் செலுத்த வேண்டும் என்றும் தன்னுடைய ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ‘மகள்களைக் கொண்டு நிலத்தில் உழுத விவசாயிக்கு மாடுகளுக்கு பதிலாக ட்ராக்டர் நாளை காலையில் சென்றடையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading