மனிதர்களின் விசுவாசி மற்றும் உற்ற தோழனாக இருக்கும் விலங்குகளில் நாய் முதன்மையனது. நாயின் ஆயுட்காலம் சராசரியாக 14 - 16 ஆண்டுகளாக இருக்கிறது. Rafeiro do Alentejo என்ற இனத்தை சேர்ந்த Bobi என்ற நாய் சமீபத்தில் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
வீடு அல்லது ஓரிடத்தை பாதுகாக்க பயிற்சி பெற்ற ஆண் நாயான Bobi-க்கு, கடந்த பிப்ரவரி 1, 2023 நிலவரப்படி 30 வயது 266 நாட்கள் ஆனது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி கின்னஸ் உலக சாதனையால் உலகின் மிக வயதான நாயாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது மத்திய போர்ச்சுகலில் இந்த நாய் வாழ்ந்து வருகிறது.
கடந்த 1939-ஆம் ஆண்டு 29 வயது மற்றும் 5 மாதங்களில் இறந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாயான Bluey-யின் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான சாதனையை Bobi முறியடித்துள்ளது. Rafeiro இன நாயின் ஆயுட்காலம் பொதுவாக 12 - 14 ஆண்டுகளாகும். உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையை பெற்றுள்ள Bobi கடந்த 1992-ஆம் ஆண்டு மே 11-ல், மத்திய போர்ச்சுகலில் உள்ள கான்குயிரோஸ் என்ற சிறிய கிராமத்தில் கோஸ்டா குடும்பத்திற்கு சொந்தமான ஒரு மர சேமிப்பு கொட்டகையில் 3 குட்டிகளுடன் பிறந்தது.
Read More : சேற்றில் சிக்கிய யானைகள்..! தாயை எழுப்பிய குட்டி யானை..! வைரலாகும் வீடியோ..
Bobi-யின் வயது SIAC-ஆல் சரி பார்க்கப்பட்டது. இது போர்த்துகீசிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு SNMV-ஆல் நிர்வகிக்கப்படும் செல்லப்பிராணிகளின் தரவு தளமாகும். இதற்கிடையே Bobi பற்றிய தகவல்களை உரிமையாளரான லியோனல் கோஸ்டா ஷேர் செய்தார். Bobi பிறந்தபோது எனக்கு 8 வயது, இப்போது 38 வயதாகிறது. என் தந்தை ஒரு வேட்டைக்காரர், எங்களிடம் எப்போதும் பல நாய்கள் இருந்தன.
ஏற்கனவே வீட்டில் இருந்த விலங்குகளின் எண்ணிக்கை காரணமாக, பிறந்த நாய்க்குட்டிகளை வைத்திருக்க முடியாது என்று எனது தந்தை முடிவு செய்தார். இதனால் பிறந்த நாய் குட்டிகளை அவை கண் திறக்கும் முன்னர் கொன்று விடுவார். அப்படித்தான் நாய்க்குட்டிகள் பிறந்த மறுநாள் எனது பெற்றோர் மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, அவற்றின் தாய் நாயான கிரா இல்லாத போது குட்டிகளை தூக்கி சென்றனர். ஆனால் அவசரத்தில் 4 குட்டிகளுக்கு பதிலாக 3 குட்டிகளை மட்டுமே தூக்கி சென்றனர். விடுபட்ட அந்த 1 குட்டி நாய்தான் இப்போது கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள Bobi என்றார். சில நாட்களுக்கு பிறகு Bobi வீட்டிற்கு சற்று தொலைவில் இருக்கும் மரக்கிடங்கில் இருப்பதை நானும் எனது சகோதரர்களும் தாய் நாயான கிராவை பின்தொடர்ந்து கண்டறிந்தோம்.
ஆனால் இந்த விஷயத்தை எங்கள் பெற்றோரிடம் கூறாமல் மறைக்க முடிவு செய்தோம். நாய் கண்களைத் திறந்தவுடன் என் பெற்றோர் இனி அதை அடக்கம் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து 2 - 3 வாரங்கள் வரை ரகசியமாக வைத்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக Bobi கண்களை திறந்த பிறகே எனது பெற்றோருக்கு விஷயம் தெரிந்தது அதன் பிறகு இதை வளர்ப்பதில் எங்களுக்கு தடை ஏற்படவில்லை என்றார். Bobi-யுடன் பிறந்த குட்டிகள் கண்களை திற்கும் முன்பே புதைக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்த Bobi 30 வயதை கடந்து உலகின் மிக வயதான நாய் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Guinness, Trending News, Viral