Home /News /trend /

காலநிலை மாற்றத்தின் காரணமாக ப்ளூ டிட் பறவைகளின் இறகு நிறங்களில் மாற்றம் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!

காலநிலை மாற்றத்தின் காரணமாக ப்ளூ டிட் பறவைகளின் இறகு நிறங்களில் மாற்றம் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!

ப்ளூ டிட் பறவை

ப்ளூ டிட் பறவை

Blue Tit Birds | பிரான்சின் தெற்கில் உள்ள ஒரு பறவையினமான blue tits சுமார் 15 வருட இடைவெளியில் புவி வெப்பமடைதலின் நேரடி விளைவு காரணமாக எவ்வாறு படிப்படியாக அவற்றின் இறகுகளின் நிறத்தை இழந்திருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
காலநிலை மாற்றம் மோசமடைந்து வருவதால், ஆபத்தான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கடும் வறட்சி, புயல்கள், வெப்ப அலைகள், கடல் மட்ட உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் வெப்பமடைதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் காலநிலை மாற்றம் காரணமாக நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் பிரான்சின் தெற்கில் உள்ள ஒரு பறவையினமான நீலக் குருவி (blue tits)  சுமார் 15 வருட இடைவெளியில் எவ்வாறு படிப்படியாக அவற்றின் இறகுகளின் நிறத்தை இழந்திருக்கின்றன என்பதை ஒரு ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு புவி வெப்பமடைதலின் நேரடி விளைவு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலக் குருவியின் இறகுகள் நிறம் டல்லாகி கொண்டே வருவது அவை உயிர் வாழ்வதற்கான அச்சுறுத்தலாக அமையலாம் மற்றும் இந்த நிகழ்வு அவற்றின் புதிய குஞ்சுகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் 2 நீலக் குருவி வகையை கண்காணித்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பறவை இனங்களின் வண்ணத்தில் பிரகாசம் குறைந்துள்ளதை கண்டறிந்தனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2 வகைகளில் ஒன்று மாண்ட்பெல்லியரின் புறநகர்ப் பகுதியிலும் மற்றொன்று கோர்சிகாவின் வடமேற்கிலும் வாழ்கிறது. நீண்ட ஆய்வுக்கு பிறகு இரண்டு பறவையினங்களின் நிறத்திலும் ஏற்பட்டுள்ள கலர் சேஞ்ச், காலநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கிறது என்று ஆய்வு ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.



PV/EHU-ன் தாவர உயிரியல் மற்றும் சூழலியல் துறையின் ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆராய்ச்சியாளருமான டேவிட் லோபஸ் இது பற்றி கூறுகையில், நீலக் குருவியின் இறகுகளின் நிறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், வெப்பநிலை (1.23ºC) மற்றும் மழை வீழ்ச்சி (0.64 மிமீ) ஆகியவற்றின் கலவையின் விளைவாக ஏற்பட்டிருக்கிறது என்று கணித்துள்ளோம். எனவே காலநிலை மாற்றம் இந்த நிற வேறுபாடு ஏற்படுவதற்கான சாத்தியமான காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பறவை இனங்களின் அழகிய இறகுகளை மட்டுமல்ல இனப்பெருக்கம் என்று வரும்போது அவற்றின் இனச்சேர்க்கை முறையிலும் கூட தொந்தரவுகளை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கிறார் ஆய்வாளர் டேவிட் லோபஸ்.

Also Read : பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

காலநிலை மாற்றத்தின் விளைவாக உடலியலில் மாற்றத்தை அனுபவிக்கும் முதல் இனம் நீலக் குருவி அல்ல என்பது நாம் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் கடந்த ஏப்ரல் 2021-ல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், லேசான வசந்தகால வெப்பநிலை மற்றும் பனி முன்னதாகவே உருகுதல் உள்ளிட்டவை மலை தேனீக்களின் உடல் அளவை குறைப்பதில் பங்கு வகிப்பதாக காட்டியது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Birds, Climate change

அடுத்த செய்தி