கடந்த 1947ஆம் ஆண்டில், விஞ்ஞானி ஆடல்பெர்ட் ஏம்ஸ் ஜேஆர் என்பவர், ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றை உருவாக்குகிறார். பார்ப்பதற்கு செவ்வக வடிவ ஜன்னல் போல தோற்றமளிக்கும் இந்தப் படத்தின் உண்மையான வடிவம் அதுவல்ல. உண்மையில் இதன் வடிவம் டிரேப்சாய்ட் வடிவம் ஆகும்.
விஞ்ஞானியின் ஏம்ஸ் என்ற பெயரிலேயே இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஒரு விஷுவல் ஆர்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்ததாம். அதற்குப் பிறகு மக்கள் வடிவங்களையும், நிழலையும் எவ்வாறு உணருகின்றனர் என்பது குறித்து ஆராய்ச்சியை செய்திருக்கிறார். அதன் விளைவாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
யூடியூபில் தற்போது வெளியீடு
சுவாரஸ்யம் நிறைந்த இந்தப் படத்தின் காட்சியை யூடியூப் வலைதளத்தில் வெரிடாசியம் என்ற பெயரில் சானல் நடத்துபவர் வெளியிட்டுள்ளார். இந்த டிரேப்சாய்ட் வடிவ ஜன்னலை நாம் சுற்றும்போது அது 360 டிகிரி கோணத்தில் சுற்றும். ஆனால், பார்ப்பதற்கு ஏதோ செவ்வக வடிவமான ஜன்னல் முன்னும், பின்னும் அசைந்து கொண்டிருப்பதாக நமக்கு புலப்படும்.
நாம் எங்கு வளர்ந்தோம் என்பதைப் பொறுத்து மாறுபடும்
யார், யார் எங்கு வளர்ந்தோம் என்பதைப் பொருத்து இந்தப் படம் குறித்த நமது பார்வை மாறுபடும் என்று வெரிடாசியம் சானலின் தெரீக் முல்லர் தெரிவிக்கிறார். அதாவது, நாம் எல்லோரும் செவ்வக வடிவிலான அறைகளில் வாழ்ந்து பழகி விட்டதால், இந்தப் படமும் பார்த்த உடன் செவ்வக வடிவத்தில் தோன்றும் என்கிறார் அவர்.
Also Read : அது நம்மல நோக்கி தான் வருது ஓடுங்க.. விபரீதத்தில் முடிந்த குழந்தைகளுக்கான விளையாட்டு
முன்னதாக, கடந்த 1957ஆம் ஆண்டில் இந்த வடிவம் குறித்து ஆப்ரிக்காவில் வாழ்ந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டதாம். அப்போது, நகர்ப்புறத்தில் வளர்ந்த 60 சதவீத குழந்தைகள், அந்த செவ்வக வடிவ படம் முன்னும், பின்னும் சென்று வருவதாகக் கூறினார்கள். ஆனால், கிராமத்தில் வளர்ந்த 17.5 சதவீதம் குழந்தைகள், பார்ப்பதற்கு அது வட்ட வடிவ குடிசை போல தெரிகிறது என்று பதில் அளித்தார்களாம். அதாவது, நாம் எங்கு வளர்ந்தவர் என்பதை பொருத்து, ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தின் தோற்றம் மாறுபடுகிறது.
ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது மாயத் தோற்றத்தை கொண்ட படமாகும். நாம் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திற்கு தகுந்தாற்போல மாறும் வகையில் அல்லது உற்று நோக்கும்போது நிறைய தெரிந்து கொள்ளும் வகையில் அல்லது தொடர்ந்து பார்க்கும்போது நம் சிந்தனையில் அது வேறு மாதிரியாக தோன்றும் வகையில் என வெவ்வேறு வடிவங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் வருகின்றன.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் உள்ளவற்றை நாம் கண்டுபிடிக்க முயலும்போது நம் சிந்தனைத் திறனை அது தூண்டுவதோடு மட்டுமல்லாமல், மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. இயந்திரமான வாழ்க்கைச் சூழலில் மக்கள் மிக வேகமாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை. இதனால், மனச்சோர்வு மற்றும் உடல்சோர்வு போன்றவை ஏற்படும் நிலையில், அவற்றில் இருந்து வெளிவருவதற்கான உத்திகளில் ஒன்றாக ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்றப் படங்கள் உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.