யூடியூபில் பாம்புடன் சாகசம்... கடுப்பாகி நொடிப் பொழுதில் கண்ணை கொத்திய பாம்பு - வீடியோ

கண்ணை கொத்திய பாம்பு

ரத்தம் சொட்ட சொட்ட பாம்பு ஒன்றுடன் இளைஞர் நடத்திய சாகசம் இணையத்தில் வைரலாகி உள்ளது. ஒற்றை கண்ணில் பாம்பு கொத்திய போதும் அசால்ட்டாக பாம்பை கையாண்ட அமெரிக்க இளைஞரின் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 • Share this:
  செல்லப் பிராணியாக நாய், பூனை, முயல், கிளி, மாடு என நம் நாட்டில் வளர்ப்பர். ஆனால் வெளிநாட்டினர் ஒரு படி மேல் சென்று பாம்புகளையும் வளர்ப்பர். ரஸ்யாவில் 136 கிலோ எடை கொண்ட கரடி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். கேபி பாரா (கொறித்து உண்ணி), ஃபென்னெக் நரி, அல்பாக்கா, வரிவால் லெமூர், என வித்யாசமான விலங்குகளை மகிழ்ச்சியாக வளர்ப்பதில் வெளிநாட்டினர் கைதேர்ந்தவர்கள்.

  பாம்புகளை பிடித்து சாகசம் செய்வதும், அவற்றின் முட்டைகளையும், குட்டிகளையும் எண்ணி ஒரு பாம்பு எவ்வளவு முட்டையிடும், குட்டியிடும், பாம்பு எவ்விதம் தோல் உரிக்கும், பாம்பின் வளர்ச்சி என அக்கு வேர் ஆணிவேராக பிரித்து அறிந்து அதனை வெளிநாட்டினர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலும் பாம்புகள் பற்றிய படிப்பினை, கொண்டவர்களும் கை தேர்ந்தவர்களுமே இந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவர்.

  அவ்விதம் பாம்பு ஒன்றுடன் இளைஞர் நடத்திய சாகசம்  இணையத்தில் வைரலாகி உள்ளது. அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடாவில் உள்ளது எவர் லேண்ட்ஸ் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவை நிக் என்பவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர், பாம்புகளுடன் சேர்ந்து சாகசம் செய்த பல வீடியோக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

      

  அவ்விதம் இவர் சமீபத்தில் மலைப்பாம்புடன் பேசிக் கொண்டே வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிக் பேசிக்கொண்டு இருக்கும் போதே பாம்பு அவரது கைகளில் கொத்தியது. எதையும் பொருட் படுத்தாது நிக் தொடர்ந்து பாம்பினை வைத்து அதனை விவரித்துக் கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் கடுப்பான பாம்பு அவரது கண்ணில் கொத்தி விட சற்று நேரத்தில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.

  எதையும் பொருட்படுத்தாது வந்த வேலை தான் முக்கியம் என்பன போன்று நிக் தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட பாம்புடன் தனது வீடியோ முடியும் வரையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் ஆச்சர்யத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: