ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வாங்கா பாபாவின் இரண்டு கணிப்புகள் உண்மையாகிவிட்டன – இன்னும் என்ன நடக்கப் போகிறது.?

வாங்கா பாபாவின் இரண்டு கணிப்புகள் உண்மையாகிவிட்டன – இன்னும் என்ன நடக்கப் போகிறது.?

பாபா வாங்

பாபா வாங்

Baba Vanga Predictions | இந்தியா முழுவதும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், அதனால் வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகில் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அவ்வப்போது கணித்து வருகின்றனர். உலகில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்களை கணித்தவர்களில் மிகவும் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ். பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா என்ற ஒரு பார்வையற்ற உளவியலாளர் 2022ஆம் ஆண்டு வைரஸ் தாக்குதல் சுனாமி மற்றும் ஏலியன் தாக்குதல் பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக பல செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாங்கா பாபா கணித்தவற்றில் இரண்டு விஷயங்கள் உண்மையாகி உள்ளன. அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று அச்சத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த ஆண்டு வாங்கா பாபா கணிப்புகள் வெளியிட்ட போதே, பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இவரின் பல கணிப்புகள் உண்மையாகி இருந்துள்ளது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது, இளவரசி டயானாவின் மரணம், 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதல், அமெரிக்காவின் பிரசிடன்ட் ஆக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இவர் கச்சிதமாக கணித்துள்ளார். பல்கேரியாவின் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் பிரக்சிட் ஆகியவற்றைப் பற்றியும் மிகச்சரியாக கணித்துள்ளார்

வான்ஜெலியா குஷ்டேரோவா, பன்னிரண்டாம் வயதில் ஒரு புயலில் தன்னுடைய பார்வையை இழந்தார். ஆனால், பார்வை இல்லையென்றாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் சக்தியை தனக்கு கடவுள் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு இறந்த பாபா வாங்கா 5079 ஆம் ஆண்டு வரையில் உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பற்றிய கணிப்புகளை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு வாங்கா பாபாவின் உண்மையான கணிப்புகள் :

ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் தீவிரமான வெள்ளம் பாதிப்பு உண்டாகும் மேலும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் உயிர் இழப்பும் கணிசமாக இருக்கும். அதை உண்மையாக்கும் படி, ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

Also Read : அண்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக திடீரென பிங்க் நிறமாக மாறிய வானம்

உலகத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தண்ணீருக்காக ஒரு போர் உருவாகலாம் என்றும் அவர் கணித்துள்ளார். போர்ச்சுகல் மற்றும் இத்தாலி நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும், அதனால் வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து நீங்காத நிலையில், புவி வெப்பமடைவதால், இது நாள் வரை உரைந்துள்ள ஒரு வைரஸ், ஸ்வீடனில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்படும்.

Also Read : அம்மா சொன்ன கடைசி வார்த்தைக்காக... இணையத்தில் பலரது இதயத்தையும் கவர்ந்த கதை

வாங்கா பாபாவின் எதிர்கால கணிப்புகள்:

1. 2023 ஆம் ஆண்டில் பூமியின் ஆர்பிட் மாறும் மற்றும் 2028 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் வீனஸ் கிரகத்துக்கு செல்வார்கள்.

2. உறுப்பு மாற்று சிகிச்சை மூலம், 2046 ஆம் ஆண்டு வாக்கில், மனிதர்கள் குறைந்த பட்சம் 100 ஆண்டுகள் வாழ்வார்கள்.

3. 2100 ஆம் ஆண்டு முதல், இரவு நேரம் என்பதே மறைந்து, செயற்கை சூரிய ஒளி பூமியை நாள் முழுவதும் பகலாக இருக்க வைக்கும்.

4. உலகம் 5079 ஆம் ஆண்டு அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

First published:

Tags: India, Trending