தண்ணீருக்குள் கிடக்கும் அனகோண்டாவை வம்பிழுக்கும் பிளாக் பேந்தர்.. வைரல் வீடியோ..

தண்ணீருக்குள் கிடக்கும் அனகோண்டாவை வம்பிழுக்கும் பிளாக் பேந்தர்.. வைரல் வீடியோ..

தண்ணீக்குள் கிடக்கும் அனகோண்டாவை வம்பிழுக்கும் பிளாக் பந்தர்

அனகோண்டா நீரின் மேலிருக்கும் பிளாக் பேந்தரை நீருக்குள் இழுக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
மிருகங்கள் ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டுவது இரைக்காக மட்டுமல்ல தன் பலத்தை தன் எதிரிக்கு காட்டவும் தான். தற்போது சமூக வலைதளத்தில் ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. ஜாகுவார் மற்றும் அனகோண்டா (Jaguar and an Anaconda) இடையே கடுமையான சண்டையை அந்த வீடியோ காட்டுகிறது. போவா குடும்பத்தைச் (Boa family) சேர்ந்த, தென் அமெரிக்காவின் (South America's) பச்சை நிற அனகோண்டா (Green Anaconda) உலகின் மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்று. அதோடு ஜாகுவார் (Jaguar) அமெரிக்காவின் மிகப்பெரிய பூனை இனங்களில் ஒன்று.

வேட்டை மற்றும் இரையை பிடிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. இந்த இரண்டு வேட்டையாளிகள் நேருக்கு நேர் சந்திக்கும் போது என்ன நடக்கும் தெரியுமா? முதலில் ஒவ்வொரு மிருகமும் மற்றொரு மிருகத்தை தனக்கு மிகவும் வசதியாக இருக்கும் சூழலை நோக்கி இழுக்க முயற்சிக்கும். அப்போது தான் இரண்டிற்கும் இடையில் ஒரு கடுமையான போர் நடக்கும். இந்த வீடியோவில், ஒரு மெலனிஸ்டிக் ஜாகுவார் (melanistic jaguar) பிளாக் பாந்தர் (black panther) என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரிய அனகோண்டாவை தண்ணீரிலிருந்து இழுக்க முயற்சிக்கிறது.

அனகோண்டாக்கள் உலகின் வெய்ட்டான பாம்புகளில் ஒன்றாகும், மேலும் இந்த அனகோண்டாக்கள் கிட்டத்தட்ட 130 கிலோ வரை எடையுள்ளவை என்றாலும், அவை உண்மையில் தண்ணீரில் வேகமாகவும், எந்நேரமும் ஆக்டிவாகவும் இருக்கும். இந்த அனகோண்டாக்களின் பெரிய உருவம் நிலத்தில் ஸ்லோவாக செல்ல வைக்கிறது. எனவே அனகோண்டாக்கள் எப்போதுமே நீர்நிலைகளிலோ அல்லது அதற்கு அருகிலோ தான் வாழும். இந்த நிலையில், அனகோண்டா நீரின் மேலிருக்கும் பிளாக் பாந்தரை நீருக்குள் இழுக்க முயற்சித்தது, பிளாக் பாந்தர் என்றால் சும்மாவா, அந்த அனகோண்டாவை நீரிலிருந்து மேலிழுத்தது.

அனகோண்டாவுக்கும் ஜாகுவருக்கும் இடையிலான இந்த சண்டையின் வீடியோ காட்சிகள் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இணையதளத்தில் பரவி வருகின்றன. இப்போது ஏன் இந்த திடீர் வைரல் என்றால் சமீபத்தில் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் (microblogging platform Twitter) மீண்டும் தோன்றியதிலிருந்து பல்ஆயிரக்கணக்கான மக்களால் இந்த வீடியோ பார்க்கப்பட்டு அவர்களால் வைரல் ஆக்கப்பட்டது.

ட்விட்டரின் கமெண்ட் செக்ஷனில் "ஜாகுவார் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது, இது உண்மையில் ஒரு அருமையான விலங்கு" என்று ஒரு ட்விட்டர் யூசர் போஸ்ட் செய்திருந்தார். மேலும் மற்றொரு யூசர் இது ஒரு "அசாதாரண வீடியோ," என்றார். இது போன்று பலரும் தங்கள் கருத்துக்களை கமெண்ட் பிரிவில் குறிப்பிட்டு வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: