Home /News /trend /

சிகப்பு நிற குதிரைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து ரூ.23 லட்சத்திற்கு விற்ற இளைஞர்- 3 பேர் கைது

சிகப்பு நிற குதிரைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து ரூ.23 லட்சத்திற்கு விற்ற இளைஞர்- 3 பேர் கைது

குதிரைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து விற்ற பஞ்சாப்காரர்

குதிரைக்கு கருப்பு பெயிண்ட் அடித்து விற்ற பஞ்சாப்காரர்

குதிரைக்கு பெயிண்ட் அடித்து 23 லட்சத்திற்கு விற்ற நபர்கள் கைது.

1997-ஆம் ஆண்டில் நாகார்ஜுனா, எஸ்பிபி, ரகுவரன், வடிவேலு, சுஷ்மிதா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'ரட்சகன்' ஞாபகம் இருக்கிறதா? கண்டிப்பாக இருக்கும்; ஏனெனில் பலருக்கும் 'ரட்சகன்' ஒரு 'ஆல் டைம் ஃபேவரைட் மூவி' ஆகும். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத கதை, கதாபாத்திரங்கள், குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை - அதை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த பட்டியலில் நம்ம வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி ட்ராக்கிற்கும் ஒரு தனி இடம் உண்டு.

ரட்சகன் படத்தில் வடிவேலுவின் காமெடி என்றதுமே, ஒரு கன்னுக்குட்டிக்கு நாய் வேஷம் போட்டு அதை நாய் கண்காட்சிக்கு கொண்டு சென்று வடிவேலு செய்யும் அலப்பறைகளே நம் நினைவுக்கு வரும். இடுப்பளவு உயரமான வெள்ளை நிற கன்னுக்குட்டி ஒன்றிற்கு கருப்பு நிற நாய் போல வேடமிட்டு "கன்னுக்குட்டினு கடுகளவு கூட தெரிய கூடாது.. அப்போ தான் காசு!" என்று குபீர் சிரிப்புகளை கிளப்புவார் நம்ம வடிவேலு!

இதே மேட்டரை கொஞ்சம் 'ஆல்டர்' செய்து, பஞ்சாப்காரர் ஒருவர், சிகப்பு நிற குதிரை ஒன்றிற்கு கருப்பு பெயிண்ட் அடித்து, அதை 23 லட்சத்திற்கு விற்று, வேற லெவலில் மோசடி ஒன்றை செய்துள்ளார்.

முழுமையான கருப்பு நிறத்தில் குதிரை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால், மற்ற நிறங்களுடன் ஒப்பிடும்போது மார்க்கெட்டில் கருப்பு நிற குதிரைகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதை நன்றாக அறிந்த ஜதிந்தர் பால் சிங் செகோன், லக்விந்தர் சிங் மற்றும் லச்ரா கான் என்ற கோகா கான் ஆகியோர்கள், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரின் தலையில் தான் மிளகாய் அரைத்துள்ளனர்.. இல்லை இல்லை.. கருப்பு பெயிண்ட் அடித்துள்ளனர்! சிகப்பு நிற குதிரையை, கருப்பு நிற குதிரை என்று நம்பி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த ரமேஷ் குமார், அதை குளிப்பாட்டி உள்ளார்; அவ்ளோதான்.. மேட்டர் ஓவர்!

'உலகம் பிறந்து எனக்காக' திரைப்படத்தில் கவுண்டமணி தன் தங்கைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்து, ஏமாற்றி செந்திலுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்; பிறகு அந்த பெண் குளிக்கும் போது பாத்ரூமில் இருந்து வெள்ளை நிற பெயிண்ட்டாக வெளியே வருமே! அதே போல குளிப்பாட்ட குளிப்பாட்ட கருப்பு நிற குதிரையின் கலர் சிகப்பாக மாறி உள்ளது.ரொக்கமாக ரூ.7.6 லட்சம், மீதமுள்ள தொகைக்கு இரண்டு காசோலைகளை கொடுத்து, மொத்தம் சுமார் ரூ. 23 லட்சத்திற்கு தான் வாங்கி வந்தது உண்மையிலேயே ஒரு கருப்பு நிற குதிரை அல்ல என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குமார், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து குதிரைக்கு கருப்பு பெயிண்ட் அடித்த குற்றவாளிகள் மூவரும் மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இதேபோல மற்றொரு வினோதமான ஒரு சம்பவத்திலும் - குதிரை தான் ஹைலைட்! 40 வயதுமிக்க கஃபூர் அலி மொல்லா என்கிறவர், தன் குதிரை ஏற்கனவே களைப்பாக உள்ளது என்பதால், 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன் வீட்டிற்கு குதிரை மீது ஏறி சவாரி செய்யமால், குதிரையை லோக்கல் ட்ரெயின் ஒன்றில் ஏற்றி, மக்களோடு மக்களாக சவாரி செய்து உள்ளார். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய பாசக்காரர் தான், ஆனால் ரயிலில் பயணம் செய்த ஒருவர் இதை புகைப்படம் எடுத்து சமூக ஊடங்களில் பகிரவும், அது வைரல் ஆனது.

  

பிறகு என்ன? ரயில்வே சட்டத்தின் கீழ் இது குற்றம் என்பதால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் கஃபூர் அலி மொல்லா, ரயில்வே பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Punjab, Trending

அடுத்த செய்தி