கொரோனா சிகிச்சை மையத்தில் கைகளால் அடைப்பு எடுத்து கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!

பாஜக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா

மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தை தீவிரமாக பின்பற்றி வருபவர் பாஜக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா

  • Share this:
பாஜக எம்.பி ஒருவர் சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் கழிவறை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

கொரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதால் மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இல்லாமல் நிரம்பிவழிகின்றன. இது போன்ற சூழல்களில் நிலைமையை கையாளுவதற்காக கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Read More:   உ.பி அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு; நோய்த்தொற்றால் பலியாகும் 3வது அமைச்சர்!

ஆனால் இம்மையங்களில் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியதாகவே உள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு இம்மையங்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மவுகஞ்ச் தெஹ்சில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்வதற்காக ரேவாவை சேர்ந்த பாஜக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா சென்றுள்ளார்.

அம்மையத்தினை ஆய்வு செய்த போது அங்குள்ள கழிவறை அடைத்துக் கொண்டு அசுத்தமாக இருப்பதை பார்த்த எம்.பி ஜனார்தனன் மிஸ்ரா, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானாகவே களத்தில் இறங்கி கழிவறையை சுத்தம் செய்யத் தொடங்கினார்.கையுறைகளை மாட்டிக் கொண்டு கழிவறையினுள் இருந்தவற்றை எடுத்து வெளியே போட்டுவிட்டு, அங்கு நன்றாக தேய்த்து சுத்தம் செய்துவிட்டு பின்னர் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இது தொடர்பாக எம்.பி ஜனார்த்தனர் மிஸ்ரா கூறுகையில், இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் தொடங்கி சுகாதார பணியாளர்கள் வரை எந்த வேலையும் சிறியது, பெரியது என கிடையாது. கழிப்பறை அழுக்காக இருந்தது, எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னிறைவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் நான் அதை சுத்தம் செய்தேன்” என்றார்.பாஜக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா இது போன்று கழிவறையை சுத்தம் செய்வது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு ரேவா மாவட்டத்தின் கஜூஹா எனும் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றினை ஆய்வு செய்த போது அங்கு கழிவறை சுத்தமில்லாமல் இருந்ததால் அவரே நேரடியாக யாரையும் பணிக்காமல் அவரே கழிவறையை சுத்தம் செய்து கொடுத்தார். மேலும் சாலைகளையும் அவர் சுத்தப்படுத்தியுள்ளார்.

Read More:   கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!

மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தை தீவிரமாக பின்பற்றி வருபவர் பாஜக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: