• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தேர்தலில் டிக்டாக் நடிகைக்கு சீட் கொடுத்த பாஜக.. வைரலாகும் வீடியோ

தேர்தலில் டிக்டாக் நடிகைக்கு சீட் கொடுத்த பாஜக.. வைரலாகும் வீடியோ

டிக்டாக் வீடியோ மூலம் அந்த மாநில வாக்காளர்களை எளிதில் தங்கள் பக்கம் ஈர்த்துவிட பாஜக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
ஹரியானா தேர்தலில் டிக்டாக் நடிகைக்கு பாஜக சீட் வழங்கியுள்ளதால் அவரின் வீடியோ அதிகம் பார்க்கப்படுகிறது.

90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 78 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய பாஜக எம்எல்ஏக்கள் 38 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, 7 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பாஜகவில் இணைந்த விளையாட்டு வீரர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், தாத்ரி தொகுதியிலும், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங், பெஹோவோ தொகுதியிலும், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், பரோடா தொகுதியிலும் பாஜக வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

இதற்கிடையே அதம்பூர் தொகுதி வேட்பாளராக தொலைக்காட்சி பிரபலமான சோனாலி களமிறக்கப்பட்டுள்ளார். இவரின் டிக்டாக் வீடியோ மூலம் அந்த மாநில வாக்காளர்களை எளிதில் தங்கள் பக்கம் ஈர்த்துவிட பாஜக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.















இந்த நிலையில் பாஜவில் சீட் கிடைத்த சோனாலி  டிக் டாக்கில் ஆடிய வீடியோக்கள் அதிவேகத்தில் பரவி வருகின்றன.

Also Watch : பூட்டியவீட்டில் 280 சவரன் கொள்ளை: தேனி தொழிலதிபர் வீட்டில் கைவரிசை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: