Home /News /trend /

நிறைய பெண்கள் இருப்பாங்கன்னு சொன்னீங்க.. ஏமாந்துபோன இளைஞர் டேட்டிங் வெப்சைட் மீது வழக்கு

நிறைய பெண்கள் இருப்பாங்கன்னு சொன்னீங்க.. ஏமாந்துபோன இளைஞர் டேட்டிங் வெப்சைட் மீது வழக்கு

மாதிரி படம்

மாதிரி படம்

உண்மையில் நிறுவனத்தின் டேட்டிங் வெப்சைட்டில் பதிவு (registered) செய்யப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்தாமல் ஏராளமான பெண்கள் தங்கள் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் இயன் கிராஸ் புகார் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
பலநாட்டு மக்களின் உறவு நிலைகளை முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக மாற்றுவதில் டேட்டிங் ஆப்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் பேரிடருக்கு பிறகு, டேட்டிங் ஆப்ஸ்கள் முன்பை விட பெரிய மாற்றத்தை கண்டன. டேட்டிங் ஆப்ஸ்கள் மற்றும் வெப்சைட்கள் இப்போது மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகி விட்டது. ஒரு சில பிரபல டேட்டிங் நிறுவனங்கள் யூஸர்கள் தங்கள் ப்ரொஃபைலில் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளாரா? இல்லையா? என்பதை தெரியப்படுத்தும் Vaccine Status"-ஐ சேர்த்துள்ளது உலகம் முழுவதும் பரவலான விவாதத்திற்கு வழிவகுத்தது.

இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் தலைநகரான டென்வர் நகரில், 29 வயதான இளைஞர் ஒருவர் டேட்டிங் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். டேட்டிங் வெப்சைட் மூலம் தனக்கு சரியான ஜோடி அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அந்த இளைஞர், குறிப்பிட்ட நிறுவனம் மூலம் சந்தித்த ஏமாற்றத்தை அடுத்து வழக்கு தொடுத்துள்ளார்.

இது குறித்து பார்க்கலாம்.

டென்வர் நகரை சேர்ந்தவர் 29 வயதான இயன் கிராஸ் (Ian Cross). இந்த இளைஞர் தான் டென்வரை சேர்ந்த உள்ளூர் டேட்டிங் நிறுவனமான HMZ Group நடத்தும் The Denver Dating Company மீது குற்றமசாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். நெவாடாவை (Nevada) தளமாகக் கொண்ட HMZ Group-ற்கு எதிராக சில நாட்களுக்கு முன் வழக்குத் தாக்கல் செய்துள்ள இயன் கிராஸ், குறிப்பிட்ட நிறுவனம் மோசடி தூண்டல், ஒப்பந்த மீறல் மற்றும் ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளை கொண்டிருப்பதாகவும் அதன் டேட்டாபேஸ்-ன் (database) உண்மை தன்மையை மிகைப்படுத்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையில் நிறுவனத்தின் டேட்டிங் வெப்சைட்டில் பதிவு (registered) செய்யப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்தாமல் ஏராளமான பெண்கள் தங்கள் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் இயன் கிராஸ் புகார் தெரிவித்து இருக்கிறார். இந்த டேட்டிங் வெப்சைட் வழக்கமான டேட்டிங் ஆப் அல்லது வெப்சைட் போல செயல்படாது.

Also read... நீங்கள் சிங்கிளா..? உங்கள் பாலியல் ஆசையைத் தூண்டி ஆபத்தில் சிக்கவைக்கும் எஸ்.எம்.எஸ். மெசேஜ்... எச்சரிக்கை ரிப்போர்ட்

இதன் members-only service-ஐ பெறுவதற்காக, புதிய யூஸர்களின் அப்ளிகேஷன் மற்றும் ப்ரொஃபைலை சரிபார்த்து ஆக்ட்டிவ் செய்வதற்கு முன் விரிவான ஸ்க்ரீனிங் ப்ராசஸை செய்யும் வகையில் இருக்கும். இதனிடையே "25 - 35 வயது வரையிலான சிங்கிள் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்" என நிறுவனத்தின் ஒரு எக்ஸிக்கியூட்டிவ் கூறியதை அடுத்து தான் மெம்பர்ஷிப்காக 9,409 டாலர் பணம் கட்டியதாகவும், ஆனால் அதன் பின்னர் வெப்சைட்டிற்கு சென்று பார்த்தால் 18 - 35 வயது வரையிலான ரேஞ்சில் 5 பெண்கள் மட்டுமே இருப்பதை கண்டதாகவும் இயன் கிராஸ் தனது மனுவில் குற்றம்சாட்டி இருக்கிறார்.

சேவையின் தரம் மற்றும் பண்புகள் குறித்து பொதுமக்களிடம் தவறான அபிப்ராயத்தை உருவாக்கும் மற்றும் போலி அல்லது கற்பனையான ஆன்லைன் ரிவ்யூக்களை வழங்கும் The Denver Dating Company நிறுவனம் தனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் புகார்தாரரான இயன் கிராஸ் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dating apps

அடுத்த செய்தி