"திருமணத்திற்கு குறைந்தது ரூ.5000 விலை கொண்ட பரிசுபொருளுடன் வரவும்" : வினோத விதிகளுடன் அழைப்பு விடுத்த தம்பதியினர்!

அழைப்பிதழ்

திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமண நிகழ்வுகள், உணவு, அலங்காரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஒன்று விடாமல் தெளிவாகத் திட்டமிடுவார்கள்.

  • Share this:
திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று. சிறப்பாக, திருமண விழா எந்த ஒரு குறையுமின்றி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே குடும்பத்தினரின் ஆசையாக இருக்கும். இதனாலேயே திருமண ஏற்பாடுகள் அனைத்தும் கச்சிதமாக செய்வதற்கு மெனக்கெடுவார்கள்.

திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமண நிகழ்வுகள், உணவு, அலங்காரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஒன்று விடாமல் தெளிவாகத் திட்டமிடுவார்கள். இவையெல்லாம் அனைத்து திருமணங்களிலும் காணப்பட்டாலும், இங்கு ஒரு திருமண ஜோடி, புதுமையாக ஒன்றை செய்திருக்கிறார்கள். இந்தத் ஜோடி, திருமண விருந்தினர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலை (dos and donts list) வெளியிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மணமகன் மற்றும் மணமகள் சார்பாக திருமண திட்டமிடுபவர் பகிர்ந்து கொண்ட திருமண விதிகளின் பட்டியல் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. திருமணத்துக்கு வருகைத் தர உறுதி செய்யப்பட்ட அனைத்து விருந்தினர்களுக்கும் அனுப்பப்பட்ட விதிகளின் பட்டியலைக் கொண்ட புகைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட் Reddit இல் வெளியிடப்பட்டது. விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட மெயில், வெட்டிங் பிளானரின் வாழ்த்துடன் தொடங்குகிறது. மேலும், மொத்தம் எத்தனை நபர்கள் வருகிறார்கள் என்ற வருகையை உறுதிப்படுத்த கோருகிறார். கூடுதலாக, திருமணத்தில் பின்பற்ற வேண்டிய 10 வெவ்வேறு விதிகளை அவர் பட்டியலிடுகிறார்.

முதல் விதி, விழா தொடங்குவதற்கு குறைந்தது 15-30 நிமிடங்களுக்கு முன்னதாக விருந்தினர்கள் அந்த இடத்தில் இருக்க வேண்டும். இது மிகவும் இயல்பானதாகவே காணப்பட்டாலும், பின்வருபவை வினோதமானது என்று கூறாமல் இருக்க முடியாது. விருந்தினர்கள் விழாவில் என்ன உடை அணியலாம் அல்லது அணியக் கூடாது என்பது குறித்த விதிகளில் தெளிவான வழிமுறைகள் உள்ளன. மேலும் விருந்தினர்கள் வெள்ளை, கிரீம் அல்லது ஐவரி நிறங்களில் ஆடிய அணியக் கூடாது என்று பட்டியல் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமான பாப் அல்லது போனிடெயில் தவிர வேறு ஒரு சிகை அலங்காரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல முழு மேக்கப்பிறகும் தடை. இந்த பட்டியலில் ஒரு கடுமையான சமூக ஊடக SOP யும் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்படும் வரை, பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விருந்தினர்கள் ஒரு சிறப்பு ஹேஸ்டேக் மூலம் மட்டுமே படங்களை பதிவிட வேண்டும் என்றும் பட்டியலில் உள்ளது. விருந்தினர்கள், விழாவை ரெக்கார்ட் செய்ய மற்றும் மணமகளிடம் பேசவும் அனுமதியில்லை.

Also read... மணமேடையிலேயே தூங்கிய மணமகன்... தட்டி எழுப்பும் உறவினர்கள் - வைரலாகும் வீடியோ!

விநோதமாக இருக்கிறதல்லவா? இப்போது இந்த இறுதி விதிமுறையைப் படிக்கும் முன்பு கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும். திருமணப் பரிசாக, குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு இல்லாமல், விருந்தினர்கள் யாரும் திருமணத்துக்கு வரக்கூடாது என்பது தான் அந்த கடைசி விதி.!

திருமண விதிகளின் இந்த வினோதமான பட்டியல் Reddit யூசர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் இதனை எதிர்த்து பதிவு செய்து வருகின்றனர். இதைப் போன்ற முட்டாள்தனமான விதிகளைப் பின்பற்றுவதை விட திருமணத்தை புறக்கணிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். நகைச்சுவையான எதிர்வினைகளுடன் இந்த பதிவு 3 ஆயிரம் கமெண்ட்டுகள் மற்றும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்வோட்களை பெற்றுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: