ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காதலர் தினத்தில் புதுவிதமாக பிரெஞ்சு பிரைஸ் பெர்பியூம் தயாரித்த நிறுவனம்... இதன் வாசனை எப்படி இருக்கு தெரியுமா?

காதலர் தினத்தில் புதுவிதமாக பிரெஞ்சு பிரைஸ் பெர்பியூம் தயாரித்த நிறுவனம்... இதன் வாசனை எப்படி இருக்கு தெரியுமா?

காதலர் தினத்தில் புதுவித பெர்பியூம் தயாரித்த நிறுவனம்

காதலர் தினத்தில் புதுவித பெர்பியூம் தயாரித்த நிறுவனம்

Idaho Potato Commission (IPC) என்கிற நிறுவனம் தான் இந்த புராடக்ட்டை அறிமுகம் செய்துள்ளனர். இது ஒரு லிமிடேட் எடிஷன் வகையாகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாக காதலர் தினம் என்றாலே பரிசு மழையில் நனைந்து விடலாம். அந்த அளவிற்கு தனது காதலை தெரிவிக்கும் விதமாக பல பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து விடுவார்கள். இதற்கு தகுந்தாற்போல பல்வேறு நிறுவனங்கள் புது புது விஷயங்களை ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் செய்து வருவார்கள். புதுவித சாக்லேட்டுகள், மோதிரங்கள், பிரேஸ்லெட், பர்ஸ், டிஷர்ட் போன்ற பல வித பொருட்களை காதல் ஜோடிகளுக்கு ஏற்றது போல கஸ்ட்டமைஸ் செய்து தந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு நிறுவனம் காதலர் தினத்தன்று வித்தியாசமான முறையில் ஒரு புராடக்ட்டை அறிமுகம் செய்துள்ளனர்.

இதை உலகம் முழுக்க உள்ள பிரெஞ்சு பிரைஸ் பிரியர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையில் தயாரித்துள்ளனர். இந்த பெர்பியூம் பெயர் 'Frites by Idaho' என்று வைத்துள்ளனர். இதை உருளைக்கிழங்கு மூலம் தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக காய்ச்சி வடிகட்டிய ஐடாஹோ உருளைக்கிழங்கு மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு இந்த பெர்பியூம் செய்துள்ளனர். இதன் வாசனை மிகவும் புதுமையாக இருக்கும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

Idaho Potato Commission (IPC) என்கிற நிறுவனம் தான் இந்த புராடக்ட்டை அறிமுகம் செய்துள்ளனர். இது ஒரு லிமிடேட் எடிஷன் வகையாகும். அதாவது சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த பெர்பியூம் கிடைக்கும். இதை IPC இணைய தளத்தில் மட்டுமே பெற முடியும். இந்த பெர்பியூமை தயாரிக்க பல நாட்கள் எடுத்து கொண்டதாக கூறுகின்றனர். சூடான நாட்கள் மற்றும் குளிர்ந்த இரவுகள், மலை நீர்ப்பாசனம் மற்றும் எரிமலை மண்ணுடன் சேர்ந்து உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி இதன் பிரெஞ்சு பிரைஸ் நறுமணத்தை உருவாக்கி உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த பெர்பியூம் தயாரிப்பு நிறுவனம் இது போன்ற பல வகையான தனித்துவம் நிறைந்த பெர்பியூம்களை தயாரித்துள்ளது. இது உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்த பிரெஞ்சு பிரைஸ் வாசனை கொண்ட பெர்பியூமை காதலர் தினத்தன்று அறிமுகப்படுத்தி, பிரெஞ்சு பிரைஸ் காதலர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர். இது குறித்து மேலும் பல விரிவான விளக்கங்களை அவர்களின் தளத்தில் தந்துள்ளனர்.

Also read... கல்யாணத்துக்கு அழைப்பு இல்லாமல் வரக் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது - இது மணப்பெண்ணின் கன்டிஷன்

இப்படியொரு வித்தியாசமான பெர்பியூமை தயாரித்ததற்கான காரணத்தை குறித்து கேட்டபோது, சில தரவுகளை கூறினார். அதாவது 90% அமெரிக்கர்களுக்கு இந்த பிரெஞ்சு பிரைஸ் உணவின் வாசனையை தவிர்க்காமல் இருக்க முடியாது. எனவே இதை கருத்தில் கொண்டுதான் இப்படியொரு பெர்பியூமை தயாரித்ததாக கூறியுள்ளனர். மேலும் இதை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள சர்வே ஒன்றை எடுத்ததாகவும் கூறுகின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Idaho Potatoes (@idahopotatoes)இவர்கள் அறிமுகம் செய்த இந்த பிரெஞ்சு பிரைஸ் பெர்பியூம் பற்றிய தகவலை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். பலர் இந்த பதிவை பார்த்து வியந்து வருகின்றனர். குறிப்பாக பிரெஞ்சு பிரைஸ் காதலர்களுக்கு இந்த காதலர் தினத்தன்று சிறப்பான ஒன்றாக இந்த பதிவு அமைந்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Valentine's day