• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • 2020ல் ஒவ்வொரு நொடிக்கும் ஆர்டர் செய்யப்பட்ட 'பிரியாணி' - Swiggy வெளியிட்ட தகவல்

2020ல் ஒவ்வொரு நொடிக்கும் ஆர்டர் செய்யப்பட்ட 'பிரியாணி' - Swiggy வெளியிட்ட தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

2020-ம் ஆண்டில் நொடிக்கு நொடி ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஆன்லைன் விநியோக தளமான ஸ்விக்கி (Swiggy) தெரிவித்துள்ளது. 

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்த ஆண்டு கொரோனா வைரஸ் (Corona virus) தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் பல இடங்களில் ஹோட்டல்கள் முதல்  தள்ளுவண்டி உணவுக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதுபோன்ற நிலைமைகளில் வீட்டில் உணவு தயாரிக்க முடியாதவர்கள் ஆன்லைன் தளங்களை தேடி ஓடினர். அந்தவகையில் நொடிக்கு நொடி ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஆன்லைன் விநியோக தளமான ஸ்விக்கி (Swiggy) தெரிவித்துள்ளது. 

  சிக்கன் பிரியாணி (chicken biryani) இந்தியாவின் விருப்பமான உணவாக தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு வெஜ் பிரியாணி (veg biryani) ஆர்டர் செய்த வேளையில், ஆறு சிக்கன் பிரியாணிகளும் ஆர்டர்கள் செய்யப்பட்டன. ஸ்விங்கியின் வருடாந்திர 'ஸ்டேட்டிஸ்டிக்ஸ்' ('StatEATstics') பகுப்பாய்வின் ஐந்தாவது பதிப்பின் தரவுகளின்படி, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பயனர்கள் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி கூறியது. 

  "ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், ஆபிஸ் முகவரிகளுடன் ஒப்பிடும்போது வீட்டு முகவரிகளுக்கு 5 மடங்கு அதிகமான ஆர்டர்களை நாங்கள் வழங்கியிருந்தாலும், அந்த எண்ணிக்கை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வீட்டு ஆர்டர்களுக்கு எதிராக 9 மடங்கு அதிகரித்தது என குறிப்பிட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் (Work From Home) போது ஆபிஸ் கபூசினோக்கள் மற்றும் மசாலா சாய் (office cappuccinos and masala chais) காணாமல் போனது, பல லட்சம் ஸ்விக்கி கஸ்டமர்கள் பல வகையான டீ மற்றும் காபியை (tea and coffee) ஆர்டர் செய்தனர். 

  இரண்டு லட்சம் பானி பூரி (pani puri) ஆர்டர்கள் ஊரடங்கிற்கு பின்னர் ஸ்விக்கி தங்கள் கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்ததாக கூறியுள்ளது. இந்நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 'ஸ்விக்கி ஹெல்த்ஹப்' ('Swiggy HealthHub') என்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (National Capital Region (NCR)) கஸ்டமர்கள் ஆரோக்கியமான உணவை ஆர்டர் செய்தாலும், பெங்களூர் கஸ்டமர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆர்வத்தை காட்டினர். இந்த நகரத்தில் மொத்தம் 130%  ஆரோக்கியமான உணவுக்கான ஆர்டர்கள் ஸ்விக்கி ஹெல்த்ஹப்பில் நிரம்பின.

  Also read... பின்புறம் கார் கேபின் கொண்ட மாட்டுவண்டி.. Tesla-வால் இதனை ஈடுசெய்ய முடியுமா? - ஆனந்த் மஹிந்திரா சேலன்ஜ்..

  மக்கள் இரவு உணவிற்கு சராசரியாக 342 கலோரி உணவுகளை ஆர்டர் செய்தனர். மதிய உணவு 350 கலோரிகளுக்குக் குறைவாக இருந்த உணவுகளை ஆர்டர் செய்தும், அதே நேரத்தில் காலையில் மக்கள் சராசரியாக 427 கலோரி உணவுகளை ஆர்டர் செய்தனர். நிறுவனத்தின் மளிகை மற்றும் அத்தியாவசிய விநியோக சேவையான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) 75,000 கிலோ வெங்காயத்தை வழங்கியுள்ளது.  "எங்கள் குறுகிய டெலிவரி (Shortest delivery) பெங்களூருவில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வந்தது. அதுவும் வெறும் 600 மீட்டர் பரப்பளவில் ஒரு வெற்று வாட்டர் கேனை தங்கள் வீட்டிலிருந்து சேகரிப்பதற்காக இருந்தது என்றும், ஸ்விக்கியின் மிக நீண்ட டெலிவரி கொல்கத்தாவில் 39 கி.மீ. தொலைவிற்கு இருந்ததாகவும் அதுவும் வெறும் சிம் கார்டை வழங்குவதற்கு என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: