Home /News /trend /

மகிழ்ச்சிக்கு மற்றொருவர் தேவையா? இணையத்தில் வைரலாகும் பறவையின் கியூட் வீடியோ

மகிழ்ச்சிக்கு மற்றொருவர் தேவையா? இணையத்தில் வைரலாகும் பறவையின் கியூட் வீடியோ

கியூட் வீடியோ

கியூட் வீடியோ

Viral Video : சீசாவில் பறவை ஒன்று அமர்ந்து கொண்டு தனக்கு தானே மகிழ்ந்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. நமக்கு நாமே மகிழ்ச்சி என்பது போல் வீடியோ அமைந்துள்ளதாக இணையவாசிகள் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    மகிழ்ச்சி என்பது நம்முள் இருக்கும் ஒன்று அதனை பிறரிடம் இருந்து பெறுவதை விட நம்முள் இருப்பதை நமக்கு நாமே அதனை அனுபவிக்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் முதலில் மகிழ்வாக இருந்தால் மட்டுமே பிறரை மகிழ்விக்க முடியும். இதனை பறவை ஒன்று கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரி இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் தலைப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் , மகிழ்ச்சியின் திறவுகோல் என்பது முதலில் உங்களை நீங்கள் மகிழ்வித்தல் என பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் பூங்காவில் உள்ள சீசா விளையாட்டினை பறவை ஒன்று தன்னந்தனியே விளையாடி மகிழ்கின்றது. சீசாவின் ஒருபக்கம் சென்ற பறவை மேலே செல்கின்றது பின்னர் அதன் மறுபக்கம் சென்று கீழே வருகின்றது. பறவையின் இந்த கியூட்டான செயல் இணயத்தில் பலரது மனங்களை வென்று வைரலாகி வருகின்றது. இதுவரை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தாவின் பதிவினை 868 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 54.9 லட்சம் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.



    இதேபோன்று மற்றொரு வீடியோ ஒன்று சுசந்தா நந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாம்பு ஒன்று குட்டி போடுகின்றது. பாம்புகள் முட்டையிடும். சில பாம்புகள் குட்டியிடும்.



    பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் விரியன்கள் போன்ற சில பாம்புகள் குட்டி போடுகின்றன. மண்பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகளில் குருட்டுப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் தானாகவே கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி