படித்துள்ளோம்... கேட்டுள்ளோம்... கல்லைப் போட்டு உயர்த்தி தண்ணீரைப் பருகிய காக்கா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

படித்துள்ளோம்... கேட்டுள்ளோம்... கல்லைப் போட்டு உயர்த்தி தண்ணீரைப் பருகிய காக்கா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

படித்துள்ளோம்.. கேட்டுள்ளோம்.. இப்போது நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது என பலரும் இந்த வீடியோவை தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும், இணையத்தள பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள் எதையாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பர். முன்னேற்றம் என்பது சிலர் வாழ்வில் புகழுக்காக மட்டும் அல்லாது வயிற்று பசிக்காகவும் இருக்கும். அவ்விதம் தனது பசியை தீர்க்கத் தானே போராடி தண்ணீர் பெற்ற பறவையின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  உனக்கானவற்றை பெறுவதற்கு நீ போராட வேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றது இந்தக் காணொளி. நாம் சிறுவயதில் காக்கா கதை ஒன்றை கேட்டிருப்போம். ஒரு பானையில் அடியில் தண்ணீர் இருக்கும். அதனை பெற காகம் ஒன்று கற்களை மண்பானையில் உள்ளே போட்டு அதிக கற்கள் சேர்ந்த பின்னர் தண்ணீர் மேலே வர பின்னர் தனது தாகம் தீர்க்கும்.

   

      

      

  இதனை பலரும் புத்தக வடிவிலும், கதைகள் மூலமாகவும் கேட்டிருப்போம். ஆனால் தற்போது அதன் உண்மை காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. படித்துள்ளோம்
  கேட்டுள்ளோம் இப்போது நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது என பலரும் இந்த வீடியோவை தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும், இணையத்தள பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

  அதில் பறவை ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் நீரைக் குடிக்க போராடுகின்றது. தண்ணீர் மேலே வர வேண்டும் என்பதர்காக கீழே கிடைக்கும் கற்களை கொண்டு பாட்டிலின் உள்ளே போட்டு அதன் அழுத்தத்தால் மேலே வரும் தண்ணீரை பருகுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனம் பெற்று வைரலாகி வருகின்றது.
  Published by:Sankaravadivoo G
  First published:

  சிறந்த கதைகள்