Home /News /trend /

தேசியக் கொடியை வானில் சுமந்து செல்லும் பறவை - இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

தேசியக் கொடியை வானில் சுமந்து செல்லும் பறவை - இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

கொடியை வானில் சுமந்து செல்லும் பறவை

கொடியை வானில் சுமந்து செல்லும் பறவை

Viral Video : நம்மோடு இணைந்து ,பறவையும் சுதந்திர தினம் கொண்டாடிய வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பறவை ஒன்று வானில் நமது தேசியக்கொடியை ஏந்திய படி பறந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காணுமிடமெல்லாம் மூவர்ணக்கொடியும், சுதந்திர தின வாழ்த்துக்களும் , இனிப்புகளும் வழங்கி நாட்டுமக்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பலரும் இந்தியக் கொடியை பயன்படுத்தியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை மகிழ்வுடன் பரிமாறியும் வருகின்றனர்.

    இணையத்தில் #Indianflag , #IndiaAt75 , #HarGharTiranga , #IndependenceDayIndia ஆகிய ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்திய நாட்டுத் தலைவர்கள் மட்டும் அல்லாது உலகத் தலைவர்களும் இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம் ஒரு புறம் இருக்க சுதந்திரம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா நாங்களும் கொண்டாடுவோம்ல என்பது போல் பறவை ஒன்று நம் நாட்டின் தேசியக் கொடியை ஏந்தியவாறு வானில் பறந்து செல்கின்றது. இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ குறித்து கமெண்ட்ஸ் பக்கத்தில் முதலில் இந்த வீடியோ வானில் ட்ரோன் தேசியக் கொடியை எடுத்துச் செல்வது போல் நினைத்தேன் ஆனால் அது பறவை என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றும் ஒருவர் சுதந்திர பறவை என பகிர்ந்துள்ளார்.



    Har Ghar Tiranga Campaign எனும் ஹேஷ்டேகில் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 மற்றும் 15 க்கு இடையில் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை கட்டவோ அல்லது ஏற்றவோ வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூவர்ணக் கொடியை எவ்வாறு சரியாக மடிப்பது, எப்படி பயன்படுத்துவது, என்னவெல்லாம் செய்ய வேண்டும் , செய்யக்கூடாது எனும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி