Home /News /trend /

வாய்ப்பு கிடைத்தால் நான் இவரைத் தான் திருமணம் செய்வேன் – விவாகரத்துக்குப் பின் பில்கேட்ஸ் பேட்டி

வாய்ப்பு கிடைத்தால் நான் இவரைத் தான் திருமணம் செய்வேன் – விவாகரத்துக்குப் பின் பில்கேட்ஸ் பேட்டி

Bill Gates and Melinda

Bill Gates and Melinda

Bill Gates | மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தன்னுடைய திருமணம், மனைவியுடன் உறவுகள் மற்றும் பல விவரங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். தன்னுடைய திருமணம் மிகச் சிறந்த திருமணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அதேபோல தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவரின் பெயரையும் இவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

மேலும் படிக்கவும் ...
பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதி விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான செய்தி உலகம் முழுவதுமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்யப் போகிறோம் என்று இரண்டு தரப்பிலுமே வெளியான செய்தி நம்பமுடியாததாக தான் இருந்தது. ஒருவேளை இந்த செய்தி போலியாக இருக்குமோ, யாரேனும் தவறான தகவல்களை பரப்பி விட்டு இருக்கிறாரோ என்றெல்லாம் பலரும் சந்தேகித்தனர். ஆனால் இவர்கள் விவாகரத்து செய்ய இருப்பது உண்மைதான் என்பதும் உறுதியானது. கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ததாக தெரிவித்தனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தன்னுடைய திருமணம், மனைவியுடன் உறவுகள் மற்றும் பல விவரங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சண்டே டைம்ஸ் செய்திகளுக்கு பில்கேட்ஸ் அளித்த பேட்டியில் தனக்கு தன்னுடைய திருமணம் மிகச் சிறந்த திருமணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அதேபோல தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவரின் பெயரையும் இவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

திருமணம், குழந்தைகள், குடும்பம் பற்றி பேசும்பொழுது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தவிர்க்க முடியாததாக இருக்கும். காதல், திருமணம், அதற்கு பிறகு குழந்தைகள், குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் அவர்கள் வீட்டை விட்டு செல்வார்கள்; இந்த மாதிரியான ஒரு இயல்பான மாற்றம் தான் விவாகரத்து என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்ததாக மனம் விட்டு பேசிய பில்கேட்ஸ் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் அவர் மெலிண்டாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.



“நான் மாறவே இல்லை.. எதையும் மாற்றவில்லை. எனவே நான் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்ய மாட்டேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மறுபடியும் மெலிண்டாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று தனது காதல் மனைவி மெலிண்டாவைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

Also Read : தாடி மீசையுடன் புடவைக்கட்டி வலம் வரும் இவர் யார் தெரியுமா?

அது மட்டுமின்றி எதிர்காலத்துக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது பற்றிய கேள்விக்கு தற்போது எதைப்பற்றியும் திட்டமிடவில்லை என்றும், ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு நான் பரிந்துரைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

விவாகரத்து ஆனாலும் மெலிண்டாவும் பில்கேட்ஸும் தற்போது வரை நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. “எங்களுடைய உறவு மிகவும் முக்கியமானது மற்றும் நெருக்கமானது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.



ஆனால், இது வரை விவாகரத்துக்கு இது தான் காரணம் என்று எதுவுமே கூறப்படவில்லை. மேலும், இவர்கள் வருமான வரிக்காக, சொத்து பிரச்சனைக்காக விவாகரத்து செய்தனர் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

Also Read : 11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்டுவதற்கு அனுமதித்த டிரைவர் - சர்ச்சையில் சிக்கிய விபரீத முயற்சி

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பின் போது இவர்கள் இருவரும் சேர்ந்து தான் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்வதாக தெரிவித்திருக்கிறார் பில்கேட்ஸ்.
Published by:Selvi M
First published:

Tags: Bill Gates

அடுத்த செய்தி