முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சப்பாத்தி சுட்ட பில்கேட்ஸ்... வீடியோவை பார்த்து பிரதமர் மோடி சொன்ன கமெண்ட் - வைரல் வீடியோ

சப்பாத்தி சுட்ட பில்கேட்ஸ்... வீடியோவை பார்த்து பிரதமர் மோடி சொன்ன கமெண்ட் - வைரல் வீடியோ

வைரலாகும் பில் கேட்ஸ் வீடியோ

வைரலாகும் பில் கேட்ஸ் வீடியோ

உலகளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் பில்கேட்ஸ். தற்போது பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பில்கேட்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் 1995 - 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் முதலிடத்தில் இருந்தார். தற்போது முதலிடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருக்கிறார். பில்கேட்ஸ் 102.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

உலகளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் பில்கேட்ஸ். தற்போது பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பில்கேட்ஸ், பில் & மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தை 2000-வது ஆண்டில் தொடங்கினார். அறிவியல்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களை ஊக்கப்படுத்துவது இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும் கேட்ஸ் பவுன்டேஷன் என்ற பெயரில் பெரும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி தனது சமூக சேவைகளை பில்கேட்ஸ் செய்து வருகிறார்.

ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்து பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆதரவோடு வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் கேட்ஸ் அறக்கட்டளையின் நன்கொடை செலவை ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர்களிலிருந்து, ஆண்டுக்கு 9 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

Read More : மனைவிகளான 3 சகோதரிகள்... திங்கள் டூ புதன் அட்டவணை.. நாள் பிரித்து குடும்பம் நடத்தும் கணவர்!

இந்த நிலையில், முன்னணி சமையல் கலை நிபுணரான எய்டன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், எய்டன், அண்மையில் இந்தியா வந்ததாகவும், அப்போது தான் பீகாரில் கோதுமை பண்ணைக்கு சென்றதாகவும், அப்போது சப்பாத்தி செய்வது குறித்து கற்று கொண்டதாகவும் பில்கேட்ஸிடம் தெரிவிக்கிறார். பின்னர் அந்த சப்பாத்தியை இப்போது நாம் செய்யப்போகிறோம் என கூறும் எய்டன் கோதுமை மாவும் உப்பு, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை பிசைய சொல்கிறார்.

அதை பொறுமையுடன் செய்யும், பில்கேட்ஸ் தன்னுடைய சமையல் அனுபவம் குறித்து புன்னகையுடன் பகிர்ந்து கொள்கிறார். அதில் அவர் சமையல் செய்து பல காலம் ஆகிவிட்டதாகவும், தாம் தினமும் சூப் சமைத்து அருந்துவதாக தெரிவிக்கிறார். அப்போது சப்பாத்தியை எப்படி தேய்ப்பது என்பது பற்றி எய்டன் சொல்லிக் கொடுக்க, பிகேட்ஸும் மாவை சப்பாத்தி கட்டையால் தேய்க்கிறார். அப்போது ஓவல் ஷேப்பில் இல்லாமல் சிறிது தவறுதலாக தேய்த்து எடுக்கிறார். பின்னர் சப்பாத்தி கல்லில் சப்பாத்தியை நெய் சேர்த்து சமைத்து உண்கின்றனர். அப்போது இந்திய உணவுகளை தாம் அதிகம் விரும்புவதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பில்கேட்சின் இந்த வீடியோ பதிவை பார்த்த பாரத பிரதமர் மோடி, பில்கேட்ஸை வெகுவாக பாராட்டி உள்ளார். அதில் இந்தியாவில் தற்போது டிரென்டாக இருப்பது சிறுதானியங்கள் தான் எனவும் சிறுதானிய உணவு வகைகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பில்கேட்ஸின் இந்த வீடியோ வெளியாகி 5 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

First published:

Tags: Bill Gates, PM Modi, Trending, Viral