Home /News /trend /

ரயில் தண்டவாளத்தை பைக்கில் கடந்து சென்ற போது நூலிழையில் உயிர் தப்பிய நபர் - வைரலாகும் வீடியோ

ரயில் தண்டவாளத்தை பைக்கில் கடந்து சென்ற போது நூலிழையில் உயிர் தப்பிய நபர் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Video Goes Viral : சிசிடிவி கேமரா மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால், நெஞ்சை அதிர வைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் வீடியோக்கள் சிலவற்றை நாம் கண்ணால் பார்க்கவும் நேரிடுகிறது.

ஆளில்லாத ரயில்வே கிராசிங்களில், ரயில் வருவது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதை கடந்து செல்ல முற்பட்டு, ரயில் விபத்தில் பலியாகுவது அவ்வபோது நாம் கேள்விப்படும் விஷயம். இதனால் தான், நாட்டில் உள்ள அனைத்து ஆளில்லாத ரயில்வே கிராசிங்களில் பணியாளரை நியமிக்க அல்லது வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப் பாதைகளை அமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே சமயம், ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தாலும், கேட்டுக்கு கீழே உள்ள இடைவெளியில் நுழைந்து பலர் பைக்குகளை ஓட்டிச் செல்வார்கள். எப்போதாவது ரயில் வரும் கேட் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழாது. ஆனால், மணிக்கு 4, 5 ரயில்கள் வந்து செல்லும் ரயில்வே கிராசிங் பகுதிகளில், இதுபோன்று பைக் ஓட்டுநர்கள் அல்லது நடந்து செல்பவர்கள் அத்துமீறி கடந்து செல்வது இயல்பான பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

ரயில்வே கிராசிங்களில் அத்துமீறி நுழைந்து செல்லும் நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது குறித்த செய்திகள் அவ்வபோது நம் காதுகளை எட்டினாலும், அதுகுறித்த அலட்சியப் போக்கு இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சிசிடிவி கேமரா மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால், நெஞ்சை அதிர வைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் வீடியோக்கள் சிலவற்றை நாம் கண்ணால் பார்க்கவும் நேரிடுகிறது. இந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் ஒன்றுதான் இப்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள் : கல்யாணத்துக்கு அழைப்பு இல்லாமல் வரக் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது - இது மணப்பெண்ணின் கன்டிஷன்

மும்பையில் கடந்த 12ஆம் தேதி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, பைக்கில் வந்த நபர் ஒருவர், காத்திருக்க பொறுமை இல்லாமல், இரயிவே கிராசிங்கை கடந்து செல்ல முயன்றார். ஆனால், பைக் மிக சரியாக தண்டவாளத்தில் ஏறும் சமயத்தில், திடீரென கோளாறு ஏற்பட்டு நின்று விட்டது. இதனால், பைக்கை அப்படியே போட்டுவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் தப்பிவிட்டார். அதேசமயம், ரயில் ஏறியதில் பைக் உடைந்து, பல பாகங்களாக சிதறிவிட்டன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

  

இந்த வீடியோ பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளருமான ராஜேந்திர அக்லேர் என்பவரால் பகிரப்பட்டுள்ளது. பார்த்தவுடன் நம்மை அதிர வைக்கும் வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நல்ல நேரம் இருந்ததால், பைக்கில் வந்த நபர் உயிர் தப்பி விட்டதாக சிலர் கூறினாலும், பயண நேரத்தில் சில நிமிடங்களை மிச்சப்படுத்த நினைத்த, வாழ்க்கையை தொலைக்க துணியும் நபர்களை கண்டால் வேதனை தான் மிஞ்சுகிறது என பயனாளர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 9வது தளத்தில் ஊசலாடும் சிறுவன் உயிர்... பெற்ற மகனை பெட்ஷீட்டில் கட்டி தொங்கவிட்ட அம்மா!

உயிர் தப்பிய போதிலும், அந்த நபருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது என்றும், அவருக்கு 440 வாட்ஸ் ஷாக் அடித்ததை போல இது இருந்திருக்கும் என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trending, Trending Videos, Viral Video

அடுத்த செய்தி