சோசியல் மீடியாவில் மாஸ் ஹீரோவாக காட்ட முயற்சி... பிறகு நடந்ததை நீங்களே பாருங்க

சோசியல் மீடியாவில் மாஸ் ஹீரோவாக காட்ட முயற்சி

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி, தயவு செய்து இது போன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய சாகசம் செய்து யாரும் முயற்சிக்க வேண்டாம் என ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  இளைஞர் ஒருவர் தான் பைக்கில் நின்று கொண்டே சாகசம் செய்ய முயலும் வீடியோவை இணையத்தில் பதிவேற்ற எண்ணி பின்னர் விளையாட்டு விபரீதமான செயல் இணையவாசிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த வைரல் வீடியோவில், ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யும் போது நிற்க முயற்சி செய்கின்றார். அவர் பைக்கைப் பிடிக்காமல் சீட்டில் சரியாக நிற்க முயற்சிக்கும்போது, ​​அது சமநிலையை இழந்து அவர் காற்றில் வீசப்படுகிறார். அவர் முதுகில் பலமாக அடிக்கப்பட்டு கீழே விழுகிறார். அவரது தலையில் காயம் ஏற்பட்டு தப்பித்து விடுகின்றார்.

  இந்த வீடியோவை ட்விட்டரில் மார்ச் 25 அன்று ஐ.பி.எஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 18,000 க்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியுள்ளது. இத குறித்த பதிவிட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி, தயவு செய்து இது போன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய சாகசம் செய்து யாரும் முயற்சிக்க வேண்டாம் என ட்வீட் செய்துள்ளார்.

   

      

  இந்த வீடியோவை பார்த்த பலரும், சாகசம் என நினைத்து ஏன் இவ்விதம் சமூக வலைதள வீடியோவிற்காக தங்கள் உயிரை பொருட்படுத்தாது இவ்விதம் செய்கின்றனர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: