பீகார் மாநிலத்தின் பேட்டையா என்னும் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிக்கு உரிய சம்பவம் தற்போது ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. பள்ளி வகுப்பறையில், நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஆசிரியை ஒருவர் தூங்குவதும், அவருக்கு மாணவி விசிறி கொண்டிருப்பதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவியை ஏதோ பணிப்பெண் போல நிறுத்தி வைத்து கொண்டு, ஆசிரியை சாவகாசமாக தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியை கொண்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் மிக வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
வகுப்பறையில் அனைத்து மாணவ, மாணவிகளும் தரையில் அமர வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் பாடம் நடத்தாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியைக்கு மற்றொரு மாணவி விசிறி கொண்டிருக்கிறார்.
ஜூன் 4ஆம் தேதி நடந்த சம்பவம் :
தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஆசிரியை பெயர் பாபிதா குமாரி என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், பீகார் மாநிலத்தின் கதர்வா கிராமத்தில் கடந்த 4ம் தேதி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஆசிரியை தன்னுடைய செயலை நியாயப்படுத்தி பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் தான் நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன்’’ என்றார்.
Also Read : மணமகள் அணிந்திருந்த வித்தியாசமான லெஹங்கா - வைரலாகும் வீடியோ!
தொடர்புடைய ஆசிரியை மீது பீகார் மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் வைரல்
இந்த நிகழ்வு குறித்த வீடியோ முன்னதாக இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில், அது வைரல் ஆகத் தொடங்கியது. அந்த வீடியோவின் தலைப்பில், “பீகார் மாணவியின் எதிர்காலத்தை இருளில் தவிக்க வைத்து விட்டு, இந்த ஆசிரியை மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மாணவ, மாணவிகளின் கல்வி குறித்து எந்தவித கவலையும் கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த அந்த ஆசிரியை குறித்து சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மாணவியை விசிறுமாறு சொல்லி விட்டு தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் பீகார் மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். தொடர்புடைய ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் பதிவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பீகார் மாநில கல்வித் துறையில் சீர்திருத்தம் எப்போது செயல்படுத்தப்படும் என்று மற்றொரு நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் என்பவர் நல்ல வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருக்க வேண்டும் என்றும், அதைவிடுத்து இதுபோல பிற்போக்குத்தனமான காரியங்களை செய்ய கூடாது என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending Video, Viral Video