பைலட் ஆக முடியாததால் காரை விமானமாக்கிய இளைஞர்..!

இந்த ஹெலிகாப்டர் காரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்லாது உட்புறத் தோற்றத்தையும் முற்றிலும் ஹெலிகாப்டரில் இருப்பது போலவே மாற்றி வடிவமைத்துள்ளார்.

Web Desk | news18
Updated: August 8, 2019, 9:03 PM IST
பைலட் ஆக முடியாததால் காரை விமானமாக்கிய இளைஞர்..!
ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ
Web Desk | news18
Updated: August 8, 2019, 9:03 PM IST
இளைஞர் ஒருவர் விமானப் பைலட் ஆக ஆசைப்பட்டு அது முடியாததால் தனது டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றி தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

பிஹாரின் சப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மித்திலேஷ் பிரசாத். தனது விமானப் பைலட் ஆசையை தனது கார் மூலம் நிவர்த்தி செய்துகொண்டுள்ளார். ஹெலிகாப்டருக்கு இருப்பது போன்ற சுழலும் ப்ளேட், வால் பகுதி என அப்படியே ஹெலிகாப்டரின் தோற்றத்தைப் பிரதிபலிப்பது போலவே தனது டாடா நானோ காரின் வடிவமைப்பை மாற்றி அமைத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது காரை ஓட்டும்போது ஹெலிகாப்டரை இயக்கும் நினைவுடனே மகிழ்ச்சி அடைகிறாராம் மித்திலேஷ். இந்த ஹெலிகாப்டர் காரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்லாது உட்புறத் தோற்றத்தையும் முற்றிலும் ஹெலிகாப்டரில் இருப்பது போலவே மாற்றி வடிவமைத்துள்ளார்.

மேலும் பார்க்க: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...