ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆன்லைனில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டெலிவரியான உருளைக்கிழங்கு - வைரலாகும் வீடியோ!

ஆன்லைனில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டெலிவரியான உருளைக்கிழங்கு - வைரலாகும் வீடியோ!

வைரலாகும் வீடியோ!

வைரலாகும் வீடியோ!

பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்களை ஆர்டர் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு செங்கல், சோப்பு, செருப்பு, வெங்காயம் உள்ளிட்ட விலை மலிவான பொருட்கள் பார்சலில் அனுப்பி வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாங்க நினைக்கும் பொருட்களை இருந்த இடத்திலேயே ஆர்டர் செய்து வீட்டு வாசலுக்கே டெலிவரி செய்ய வைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வசதியானது என்றாலும், சில நேரங்களில் கசப்பான அனுபவத்தை பலரும் பெறுகின்றனர்.

ஏனென்றால் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்றாகவும், டோர் டெலிவரி செய்யப்படும் பொருள் முற்றிலும் வேறொன்றாகவும் இருக்கும் பல நிகழ்வுகளை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்கிறோம். பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்களை ஆர்டர் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு செங்கல், சோப்பு, செருப்பு, வெங்காயம் உள்ளிட்ட விலை மலிவான பொருட்கள் பார்சலில் அனுப்பி வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் தான் டெல்லியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் Flipkart-ல் லேப்டாப் ஆர்டர் செய்த பிறகு, அதற்கு பதிலாக டிடர்ஜென்ட் பார்களை பெற்ற சம்பவம் வைரலானது. இது போன்ற ஒரு மோசமான நிகழ்வு தான் சமீபத்தில் பீகாரில் நடந்தேறி உள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேறு பொருளை அனுப்பி வைக்கும் மற்றொரு வினோதமான சம்பவத்தில், ஒரு நபர் தான் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவிற்கு பதிலாக உருளைக்கிழங்கை பெற்றதால் கடும் அதிர்ச்சியடைந்தார். பீகார் மாநிலம் நாளந்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Read More : Flipkart-ன் பிக் பில்லியன் டே விற்பனையில் தந்தைக்காக லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - யார் மீது தவறு.?

நாளந்தாவின் பர்வால்பூரில் உள்ள ஒரு நபர் பிரபல இ-காமர்ஸ் தளமான Meesho-வில் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவுக்குப் பதிலாக ஒரு கிலோ உருளைக்கிழங்கைப் பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.சேத்தன் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், Meesho-விலிருந்து அதிக தள்ளுபடி விலையில் DJI ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்ததாக கூறினார். தான் ஆர்டர் செய்த ட்ரோன் கேமராவின் சந்தை மதிப்பு ரூ.84,999 ஆனால் Meesho-வில் ரூ.10,212 என்ற தள்ளுபடி விலையில் இருந்ததால் ஆர்டர் செய்ததாக கூறினார்.

ஆர்டர் செய்யும் முன் இந்த அளவிற்கு குறைந்த விலையில் தருகிறீர்களே, இது எப்படி என்று கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு கஸ்டமர் கேர் நபர் ஒரு பெரிய சலுகை காரணமாக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது என்று விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து முழு பணத்தையும் ஆன்லைனில் செலுத்தினேன்.

இதனை தொடர்ந்து டெலிவரி ஏஜெண்ட் ஆர்டரை டெலிவரி செய்ய வந்த போது ​​பார்சல் மிகவும் சிறியதாக இருந்ததால் தான் சந்தேகமடைந்து பார்சலை டெலிவரி ஏஜெண்ட்டையே திறந்து காட்ட சொல்லி வீடியோ எடுத்ததாக சேத்தன் குமார் கூறி இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட வைரல் வீடியோவில், டெலிவரி ஏஜெண்ட்டை பார்சலை திறக்க சைதன்யா குமார் மற்றும் நண்பர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து ஏஜெண்ட் பார்சலை திறந்த போது சிறிதும், பெரிதுமாக உருளைக்கிழங்குகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவை படமாக்கியவர், ஆன்லைன் ரீடெயிலர் மோசடி செய்ததை ஒப்புக்கொள்ள ஏஜெண்டை தூண்டுகிறார். ஆனால் இதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், பார்சலில் உருளைக்கிழங்கு இருப்பது தனக்கு தெரியாது என்றும் கூறுகிறார். இதனிடையே பர்வால்பூர் உள்ளூர் காவல் அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டால் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending Video, Viral Video