Home » News » Trend » BIHAR MAN BUILDS MAHINDRA SCORPIO STYLE WATER TANK ON TERRACE TO SHOW HIS LOVE FOR FIRST CAR VIN GHTA

ஸ்கார்பியோ காரின் வடிவத்தில் வீட்டின் மாடியில் க்ரியேட்டிவ் தண்ணீர் தொட்டி வடிவமைத்த நபர்..

ஸ்கார்பியோ மீதான இன்டாசரின் அன்பு மட்டுமல்லாமல், எஸ்யூவி மீதான ஈர்ப்பும் மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. பிரபலமான கருத்து என்னவென்றால் ஒழுங்கற்ற மற்றும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டுள்ள அப்பகுதி மக்கள், வலுவான மற்றும் உறுதியான வாகனத்தைத் தேர்வு செய்ய வைக்கிறது.

ஸ்கார்பியோ காரின் வடிவத்தில் வீட்டின் மாடியில் க்ரியேட்டிவ் தண்ணீர் தொட்டி வடிவமைத்த நபர்..
ஸ்கார்பியோ காரின் வடிவத்தில் தண்ணீர் தொட்டி கட்டிய பீகார் நபர். (Credit: News18 Lokmat)
  • News18
  • Last Updated: October 30, 2020, 8:52 AM IST
  • Share this:
பீகார் மாநிலத்தில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்த ஸ்கார்பியோ காரால் ஈர்க்கப்பட்ட ஒருவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோவை போலவே தண்ணீர் தொட்டியை வடிவமைத்துள்ளார்.    

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020ன் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஸ்கார்பியோ வாகனம் வடிவில் கட்டிய தண்ணீர் தொட்டி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளது. பீகார் பாகல்பூரில் வசிக்கும் 'இன்டாசர் ஆலம்' என்பவர் தனது முதல் காராக ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கியிருந்தார். மேலும் அந்த காரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த ஆசைப்பட்ட அவர் தனது நான்கு மாடி வீட்டின் மொட்டை மாடியின் உயரத்தில் நிற்பது போன்று ஸ்கார்பியோவின் ஒரு மாதிரியை வடிவமைத்துள்ளார்.

உள்ளூர் தகவல்களின்படி, கார் மாடல் தொட்டி உண்மையான வாகனத்தைப் போல ஒத்திருப்பது மட்டுமல்லாமல், இன்டாசரின் எஸ்யூவியின் அதே நம்பர் பிளேட்டையும் கொண்டுள்ளது. இந்த மாதிரி பயனற்றது அல்ல, மேலும் வித்தியாசமாக உள்ள அந்த நீர் தொட்டி முழு வீட்டையும் தண்ணீருடன் இணைக்கும் பணியில் உள்ளது. இன்டாசரின் மனைவி உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்குச் சென்று வந்த பின்பு தான் இந்த முழு திட்டம் தொடங்கப்பட்டது. ஏனெனில், அங்குதான் இத்தகைய மாதிரி நீர் தொட்டியைக் அவர் முதன் முதலில் கண்டுள்ளார்.


Also read... கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமிக்கப்பட்டது ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..



மேலும் அவர் தனது கணவரிடம் இந்த வடிவமைப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்த போதும், ​​முதலில் இன்டாசருக்கு அதிக நம்பிக்கை எழவில்லை. பின்னர் பிராந்திய போர்ட்டல்களுடன் பேசிய அவர், தனது தலைசிறந்த படைப்பை உருவாக்க ஆக்ராவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்ததாக கூறினார். முழு திட்டதிற்கும் ரூ. 2.5 லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும், ஊழியர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 1200 வழங்கப்படுவதாகவும் இன்டாசர் வெளிப்படுத்தினார்.

ஸ்கார்பியோ மீதான இன்டாசரின் அன்பு மட்டுமல்லாமல், எஸ்யூவி மீதான ஈர்ப்பும் மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. பிரபலமான கருத்து என்னவென்றால் ஒழுங்கற்ற மற்றும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டுள்ள அப்பகுதி மக்கள், வலுவான மற்றும் உறுதியான வாகனத்தைத் தேர்வு செய்ய வைக்கிறது. மேலும், பல அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சார பயணங்களுக்காக ஸ்கார்பியோஸில் சவாரி செய்வதைக் காண முடிந்தது. இந்த கார் பீகார் சட்டசபை தேர்தலின் வரையறுக்கும் அம்சமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகல்பூர் மாவட்டத்தில் மட்டும் மஹிந்திரா ஸ்கார்பியோ பிரபலமாக இருப்பதால், வியாபாரிகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading