ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒப்பந்தம் முடிஞ்சுது.. அதிகாரிகள் போல் நடித்து டவரையே பிரித்து திருடிச் சென்ற கொள்ளைக்கும்பல்!

ஒப்பந்தம் முடிஞ்சுது.. அதிகாரிகள் போல் நடித்து டவரையே பிரித்து திருடிச் சென்ற கொள்ளைக்கும்பல்!

செல் டவர் திருட்டு

செல் டவர் திருட்டு

நிலத்தின் சொந்தக்காரரிடம் டவர் அங்கே வைக்க போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக திருடர்கள்  கூறியதாகவும், அதனால் அவர்கள் அதை எடுத்துக் செல்வதாக கூறியுள்ளார் .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India

இதற்கு முன்னால் ரயில் என்ஜின், ரயில் தண்டவாளத்தை திருடிய செய்திகளை கேட்டிருப்போம். சமீபத்தில் ஒரு பாலத்தையே அலுவலர் என்று பொய் சொல்லி பிரித்து எடுத்து களவாடி சென்ற செய்திகளை பார்த்திருப்போம்.

அதன் தொடர்ச்சியாக இப்போது செல் டவரையே ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளது. மொபைல் நிறுவன அதிகாரிகள் போல் நடித்து, பீகார் மாநிலம் பாட்னாவில், ரூ.19 லட்சம் மதிப்புள்ள மொபைல் டவர் முழுவதையும் திருடர்கள் திருடிச் சென்றனர்.

சுமார் 15-16 வருடங்களுக்கு முன் கோபுரம் நிறுவப்பட்டதாக கோபுரம் நிறுவப்பட்ட நிலத்தின் உரிமையாளர் தெரிவித்தார். அவர்கள் இடத்தில்  வந்து சுமார் 25 பேர் இறங்கி செல் டவரை கொஞ்சம் கொஞ்சமாக பிரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : அரிதான நிகழ்வு.. இரண்டு அங்குல வாலுடன் பிறந்த பெண் குழந்தை !

நிலத்தின் சொந்தக்காரரிடம் டவர் அங்கே வைக்க போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக திருடர்கள்  கூறியதாகவும், அதனால் அவர்கள் அதை எடுத்துக் செல்வதாக கூறியுள்ளார் . தகவல்களின்படி, திருடர்கள் அதை அகற்ற 2-3 நாட்கள் எடுத்தனர். பின்னர் அவர்கள் அதை ஒரு டிரக்கில் ஏற்றி ஓட்டிச் சென்றுள்ளனர்.

பழுதடைந்த டவரை ஆய்வு செய்ய சனிக்கிழமையன்று சம்பவ இடத்துக்குச் சென்ற நிறுவன அதிகாரிகள் திருட்டு நடந்ததைக் கண்டுபிடித்தனர். ஊடக அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் பாட்னாவின் கார்ட்னிபாக் காவல் நிலையத்தின் யார்பூர் ராஜ்புதானா பகுதியில் நிகழ்ந்தது.

கார்ட்னிபாக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, சுமார் 25 பேர் கொண்ட திருடர்கள் கும்பல் கருவிகள் மற்றும் எரிவாயு கட்டர்களுடன் கோபுரத்தை பிரித்து, எடுத்து எடுத்துள்ளார். நிறுவன அலுவலர் என்று பொய் சொல்லி 19 லட்ச டவரைத் திருடிச் சென்றுள்ளார். திருடிய நபர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

First published:

Tags: Bihar, Crime News, Theft