ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

2021ம் ஆண்டில் பூமியை கடந்த மிகவும் அபாயகரமான சிறுகோள் இதுதான்!

2021ம் ஆண்டில் பூமியை கடந்த மிகவும் அபாயகரமான சிறுகோள் இதுதான்!

மாதிரி படம்

மாதிரி படம்

நமது சூரிய மண்டலத்தின் தொடக்கத்தில் உருவான ஒரு பாறையை குறித்து ஆராய வானியலாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கடந்த மார்ச் 21ம் தேதி பூமியைக் கடந்து சென்ற மிகப்பெரிய சிறுகோள் அதன் மிக நெருக்கமான அணுகுமுறையை உருவாக்கியுள்ளது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் பூமிக்கு எந்த ஒரு பேரழிவு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியுள்ளனர். இருப்பினும், நமது சூரிய மண்டலத்தின் தொடக்கத்தில் உருவான ஒரு பாறையை குறித்து ஆராய வானியலாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் இரண்டு மில்லியன் கிலோமீட்டர் (1.25 மில்லியன் மைல்) தொலைவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொலைவு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ஆனால் அது இன்னும் “அபாயகரமான சிறுகோள்” என வகைப்படுத்தப்படுவதற்கு போதுமானதாக உள்ளது.

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரகத்தின் 75 சதவிகித வாழ்க்கையை அழித்த பெரிய சிறுகோள் போன்று பூமிக்குள் நுழைந்து மகத்தான அழிவை கட்டவிழ்த்துவிடக் கூடிய இத்தகைய பொருட்களை நாசா கண்காணிக்கிறது மற்றும் பட்டியலிட்டு வருகிறது. சமீபத்தில் பாரிஸ் ஆய்வகத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோள் 2001 FO32, பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தை 1400 GMT நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டியபோதும் அது மிகவும் ஆபத்தானது என கணக்கிடப்பட்டது. மேலும் இந்த கோள் சுமார் 124,000 கிமீ (77,000 மைல்) வேகத்தில் பயணிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இத்தாலியை தளமாகக் கொண்ட மெய்நிகர் தொலைநோக்கி திட்டத்தின் வானியல் இயற்பியலாளர் கியான்லுகா மாசி, சிறுகோள் பூமியை கடந்த போது ஏற்பட்ட ஒளியை கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து நாசா வெளியிட்டதாவது, " சூரிய ஒளி ஒரு சிறுகோளின் மேற்பரப்பைத் தாக்கும் போது, பாறையில் உள்ள தாதுக்கள் சில அலைநீளங்களை உறிஞ்சி அவற்றை பிரதிபலிக்கும்" என்று கூறியுள்ளது. அதன் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் நிறமாலையைப் படிப்பதன் மூலம், வானியலாளர்கள் சிறுகோளின் மேற்பரப்பில் உள்ள தாதுக்களின் வேதியியல் மூலக்கூறுகளை அளவிட முடியும்" என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

Also read... காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது கோவிட்-19 வைரஸை குணப்படுத்துமா.? தீவிர ஆய்வில் எய்ம்ஸ் விஞ்ஞானிகள்

சிறுகோள்களின் சாத்தியமான அச்சுறுத்தல்கள் என்ன?

நமது கிரகத்திற்கு அருகில் வரும் சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சூரிய மண்டலத்தின் வரலாறு மற்றும் இயக்கவியல் குறித்து சிறந்த புரிதலை அளிக்கிறது. மேலும், இது சாத்தியமான அச்சுறுத்தல்களின் மதிப்புமிக்க தரவுத்தளமாக அமைகிறது. ஏனெனில் விண்வெளியில் இருந்து வரும் ஒரு பெரிய பாறையின் தாக்கம் முழு கிரகத்தையும் அழிக்கக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 80 முதல் 100 டன் பொருட்கள், தூசி மற்றும் சிறிய விண்கற்கள் பூமியில் விழுகின்றன. இது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் பெரிய பொருள்கள் அதிக வேகத்தைக் கொண்டிருப்பதால் அவை பெரிய தாக்கத்தை பூமியில் ஏற்படுத்தும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில், ரஷ்ய நகரமான செல்யாபின்ஸ்க் மீது விண்வெளியில் இருந்து வந்த 60 மீட்டர் அகலமுள்ள ஒரு பொருள் ஒன்று வெடித்தது. இது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலை விட 30 மடங்கு அதிக சக்தியை கொண்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நடக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் பெரிய பொருள்களின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் 2001 FO32 சிறுகோள் அல்லது அதற்கும் அதிகமான அளவில் பூமிக்கு அருகில் செல்லும் சிறுகோள்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் எதுவுமே அடுத்த நூற்றாண்டில் நமது கிரகத்தை பாதிக்க வாய்ப்பில்லை என்றும் நாசா கூறியுள்ளது. ஒரு சிறுகோள் அல்லது வால்மீனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க சாத்தியமான வழிகளை நாசா நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Asteroid