அன்பு ரசிகரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய லாஸ்லியா - வீடியோ

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான லாஸ்லியா தனக்கு பரிசு கொடுத்த ரசிகர் கேட்டு கொண்டதால் அவரை அன்பாக கட்டிபிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவர் மீதான எதிர்பார்ப்பு குறைவாக இருந்தாலும் நாட்கள் போக போக இவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றுவரை லாஸ்லியா சென்றார். கவின் - லாஸ்லியா இருவருக்கும் உடனான நட்பு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல முக்கிய காரணமாக இருந்ததது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் லாஸ்லியா மீதான ரசிகர்களின் அன்பு குறையவில்லை.

லாஸ்லியா ஆர்மி, லாஸ்லியா பேன்ஸ் கிளப் என பெரிய பட்டாளமே இவரை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் லாஸ்லியாவின் உருவத்தை கையால் அழகாக வரைந்த ஓவியத்தை ரசிகர் ஒருவர் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். பாலாஜி என்ற அந்த ரசிகர்  அழகான ஓவியத்தை தனக்கு பரிசாக அளித்துள்ளதாகவும் அவருக்கு நன்றி என்றும் லாஸ்லியா கூறிய வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.ரசிகர் பாலாஜிக்கு லாஸ்லியா நன்றி சொல்லி முடித்ததும், ஒரு ஹக் கிடைக்குமா என்று பாலாஜி அன்பாக விருப்பம் தெரிவிக்கிறார். லாஸ்லியாவும் கண்டிப்பாக என்று அவரை அன்புடன் கட்டிப்பிடிக்கிறார். கடந்த மாதம் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published by:Vijay R
First published: