இந்த 60 நாள்ல என்ன செஞ்சுருக்கீங்க...பிக்பாஸ் போட்டியாளர்களை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

இந்த 60 நாள்ல என்ன செஞ்சுருக்கீங்க...பிக்பாஸ் போட்டியாளர்களை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களை வச்சு செய்யும் நெட்டிசங்கள்!

இந்த 60 நாள்ல என்ன செஞ்சுருக்கீங்க... போட்டியாளர்கள் கூறவில்லை என்றாலும் இந்த 60 நாட்கள் என்ன நடந்தது என இணையத்தில் நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கியநிலையில் தற்போது வெற்றிகரமாக 61 நாட்களை கடந்துள்ளது.

  இதுவரை ரேகா, சுரேஷ், வேல்முருகன், சுஜித்ரா மற்றும் சம்யுக்தா ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது ரியோ, நிஷா, அர்ச்சனா, சோம், ரமேஷ், கேபி, ஆஜித், ஷிவானி, பாலாஜி, ரம்யா, சனம், அனிதா மற்றும் ஆரி ஆகிய 13 பேர் உள்ளனர்.

  இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், அனிதா, நிஷா, ரம்யா, சனம் மற்றும் ஷிவானி ஆகிய 7 பேர் உள்ளனர். இவர்களுக்கு வாக்கு அளிக்கும் நடைமுறையானது இன்று நிறைவடைய இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க பிக்பாஸ் போட்டியாளர்களிடம் இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை இன்றைய எபிசோடில் முன் வைத்துள்ளார். இதற்கு போட்டியாளர்கள் திருதிருவென முழிப்பது போலவும், ஓவரா சிந்திப்பது போலவும் உள்ளபடி இன்றைய 3-வது ப்ரோமோ அமைந்துள்ளது.

   

      

      

   

   

   

      

      

      

  போட்டியாளர்கள் கூறவில்லை என்றாலும் இந்த 60 நாட்கள் என்ன நடந்தது என இணையத்தில் நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

   
  Published by:Sankaravadivoo G
  First published: