வருங்கால கணவர் உடன் முதல் உடலுறவு... அடுத்த சில மணி நேரங்களில் இளம்பெண் மரணம்

மாதிரி படம்

போலீசார் நடத்திய விசாரணையில் உடலுறவின் போது பெண்ணுக்கு இரத்த போக்கு அதிகரித்துள்ளது.

 • Share this:
  நிச்சயம் செய்யப்பட்ட ஆணுடன் முதன் முறையாக உடலுறவில் ஈடுபட்ட பெண் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

  மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நிச்சயம் செய்த பிறகு அந்த பெண் வருங்கால கணவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் உடலுறவின் போது பெண்ணுக்கு இரத்த போக்கு அதிகரித்துள்ளது. இதனால் பெண் உடல்நிலை மோசமாகி உள்ளது. மருத்துவமனையில் அந்த பெண் தனது வருங்கால கணவர் மீது எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் போலீசார் அந்த இளைஞரை கைது செய்து உள்ளனர்.

  Also Read : இந்திய ரசிகர் அனுப்பிய வீடியோவை பார்த்து டென்ஷனாகி திட்டிய மியா கலிஃபா

  மந்தீப் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வயது 28. கடந்த சில நாட்களுக்கு முன் தான் இவர்களுக்கு திருமணம் நிச்சயம் முடிந்துள்ளது. சில மாதங்களுக்கு பின் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக உடலுறவு மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு இரத்த போக்கு அதிகரித்துள்ளது என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் போபால் ஏஎஸ்பி அங்கி ஜெய்ஸ்வால் சட்ட ஆலோசனை நடத்திய பின் இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: