ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து செய்த பேல்பூரி - இணையத்தில் வைரலாகும் குயூட்டான காணொளி!

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து செய்த பேல்பூரி - இணையத்தில் வைரலாகும் குயூட்டான காணொளி!

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து செய்த பேல்பூரி

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து செய்த பேல்பூரி

இரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்யும் பேல்பூரி இணையத்தில் வைரலாகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  தனியார் பள்ளி ஒன்று இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து குழுவாக பேல்பூரி செய்யும் காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளனர். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  இரண்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து குழுவாய் ஒற்றுமையாய் பேல்பூரி செய்கின்ற அந்த காணொளி சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. அப்படி இணையத்தில் பலபேரின் மனதைக் கவர்ந்த அந்த காணொளியில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்தால் நீங்களும் மறுமுறை பார்ப்பீர்கள்.

  மாணவர்கள் வரிசையில் நின்று பேல்பூரிக்கு தேவையான பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக அதனின் பெயர் சொல்லி ஒரு பெரிய பாத்திரத்தில் போடுகின்றனர். இதில் கடைசியில் ஒரு மாணவன் உப்பை அழகாகப் பெரிய சமையல் கலை வல்லுநர் போல் கையை வளைத்துப்போடுவது பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.

  Also Read : உலக சுற்றுலா தினம் இன்று..!

  இது மாணவர்களுக்கு ஒற்றுமையை அதிகரிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் குழு அமைப்பு, குழுவுடன் இணைந்து செயல்படுவது, மாணவர்களுக்குள் பாலியல் வேறுபாடு இன்றி ஒற்றுமை கற்றுத் தருவது போன்ற விஷயங்களை இந்த மாதிரி கூட்டு முயற்சி மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துகளாகத் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் அழகாய் இணைந்து செய்த காட்சிகளைப் பாராட்டியும் ரசித்தும் வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: School students, Viral Video