Home /News /trend /

மோசமான மற்றும் சிறந்த வொர்க்-லைஃப் பேலன்ஸை வழங்கும் நகரங்களின் முழு லிஸ்ட் இதோ!

மோசமான மற்றும் சிறந்த வொர்க்-லைஃப் பேலன்ஸை வழங்கும் நகரங்களின் முழு லிஸ்ட் இதோ!

காட்சி படம்

காட்சி படம்

Work Life Balance | தொற்றுநோய் பரவல் குறைந்து வந்தாலும் கூட பொருளாதார சரிவுகள் இன்னும் முழுவதுமாக மீண்ட பாடில்லை.

கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நடுவில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிரமங்களை - முன் எப்போதும் இல்லாத அளவிற்கு - அனுபவித்து வருகிறோம். மேலும் இந்த இரண்டிற்கும் இடையே உள்ள ஆரோக்கியமான சமநிலையையின் மதிப்பை, அதாவது வொர்க்-லைஃப் பேலன்ஸின் மதிப்பை உணர தொடங்கி உள்ளோம்; அதை பாராட்டி கொண்டாடும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.

தொற்றுநோய் பரவல் குறைந்து வந்தாலும் கூட பொருளாதார சரிவுகள் இன்னும் முழுவதுமாக மீண்ட பாடில்லை. இதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் என அனைத்துமே மிக தீவிரமான பணியாற்றி வருகிறது. இந்த இடத்தில் தான் வொர்க்-லைஃப் பேலன்ஸின் உண்மையான தேவை வெளிவருகிறது.

இதுகுறித்த ஒரு ஆய்வில், எந்தெந்த நகரங்களில் வொர்க்-லைஃப் பேலன்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது? எங்கெல்லாம் மிகவும் மோசமான வொர்க்-லைஃப் பேலன்ஸ் சூழ்நிலை நிலவுகிறது? என்கிற பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் படி.

ஓவர்-வொர்க் செய்யும் நகரங்ககளின் பட்டியல் இதோ

1. துபாய்
2. ஹாங்காங்
3. கோலா லம்பூர்
4. சிங்கப்பூர்
5. மான்டிவீடியோ
6. டோக்கியோ
7. பாங்காக்
8. கேப் டவுன்
9. லிஸ்பன்
10. புடாபெஸ்ட்

அற்புதமான வொர்க்-லைஃப் பேலன்ஸை வழங்கும் நகரங்கள்

1. ஒஸ்லோ
2. பெர்ன்
3. ஹெல்சின்கி
4. சூரிச்
5. கோபன்ஹேகன்
6. ஜெனிவா
7. ஒட்டாவா
8. சிட்னி
9. ஸ்டட்கார்ட்
10. முனிச்

சிறந்த வொர்க் ஃப்ரம் ஹோம் சூழ்நிலையை வழங்கும் நகரங்கள்

1. சிங்கப்பூர்
2. வாஷிங்டன்
3. ஆஸ்டின்
4. பெர்ன்
5. சூரிச்
6. ஜெனிவா
7. சான் பிரான்சிஸ்கோ
8. பாஸ்டன்
9. ஸ்டாக்ஹோம்
10. லிவர்பூல்

மேற்கண்ட பட்டியல் ஆனது, ஓவர் வொர்க் விகிதம், ஹெல்த் கேர் அணுகல், வேலையின் தீவிரம், உரிமைகள் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வை அளவிடுவதற்கான பாதுகாப்பு அளவீடுகள் உட்பட130 க்கும் மேற்பட்ட தரவு புள்ளிகளின் கீழ் 51 யுஎஸ் மெட்ரோ பகுதிகள் மற்றும் உலகின் 49 முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உருவாகி உள்ளது. இந்த ஆய்வு மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: வேலையின் தீவிரம், சமூகம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நகர வாழ்வாதாரம்.

Read More : பலமுறை பார்த்தாலும் கடைசி வரை குழப்பும் வேற லெவல் ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ!


இந்த ஆய்விற்காக வேலையின் தீவிரம் என்கிற வகையின் கீழ் தொலைதூர வேலைகள், அதிகமாக வேலை செய்யும் மக்கள் தொகை, அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விடுமுறை நாட்கள், அவர்களால் எடுக்கப்பட்ட விடுமுறை நாட்கள், வேலையின்மை, பல வேலைகளை செய்பவர்கள், பணவீக்கம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாட்கள் போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டது.

சமூகம் மற்றும் நிறுவனங்கள் என்கிற வகையின் கீழ் கோவிட் தாக்கம், கோவிட் நோய்க்கான ஆதரவு, உடல்நலம், மனநல மருத்துவத்திற்கான அணுகல், சகிப்புத்தன்மை போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டது.

நகர வாழ்வாதாரம் என்கிற வகையின் கீழ் எதையும் மலிவாக வாங்க கூடிய சூழ்நிலை, மகிழ்ச்சி, கலாச்சாரம் & ஓய்வு, நகர பாதுகாப்பு, வெளிப்புற இடங்கள், காற்றின் தரம், ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral, Work

அடுத்த செய்தி