• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சாலைப் பள்ளங்களை மூடும் ’பாத்ஹோல் ராஜா’ - யார் இந்த பிரதாப் பீமசேன ராவ்?

சாலைப் பள்ளங்களை மூடும் ’பாத்ஹோல் ராஜா’ - யார் இந்த பிரதாப் பீமசேன ராவ்?

பிரதாப் பீமசேன ராவ்

பிரதாப் பீமசேன ராவ்

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரதாப் பீமசேன ராவுக்கு, பெங்களுரில் இருக்கும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை எண்ணி கவலைப்பட்டுள்ளார்.

  • Share this:
பெங்களுருவில் சாலைகளில் இருக்கும் பள்ளங்களை, தொண்டு நிறுவனம் மூலம் சரிசெய்து வருகிறார் பிரதாப் பீமசேன ராவ்.

இந்தியாவில் இருக்கும் சாலைகளில் பள்ளங்கள், குழிகள் இல்லாத சாலைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நகரம் மற்றும் கிராமம் என எதுவாக இருந்தாலும் பள்ளங்களை பார்க்க முடியும். இந்த பள்ளங்களினால் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளை சந்திக்கின்றனர். அண்மையில் சென்னையில் கூட இளைஞர் ஒருவர் சாலையில் இருந்த பள்ளத்தால், நிலைதடுமாறி விழுந்து அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். தம்பதி ஒன்றும் சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைத்தடுமாறி அரசுப் பேருந்தின் மீது விழுந்தனர். இந்த விபத்தில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இதேபோன்ற விபத்து ஒன்று பெங்களூரைச் சேர்ந்த பிரதாப் பீமசேன ராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அன்றிலிருந்து சாலையில் இருக்கும் பள்ளங்களை சரிசெய்வதையே தன்னுயை தொண்டாக செய்து வருகிறார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரதாப் பீமசேன ராவுக்கு, பெங்களுரில் இருக்கும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை எண்ணி கவலைப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் நண்பரின் மகள் ஒருவர், சாலையில் இருக்கும் பள்ளத்தால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பு பிரதாப்பை பெரிதும் பாதித்துள்ளது.

இது குறித்து அவர் பேசும்போது, "நண்பரின் மகளான அருந்ததி எனக்கும் மகள் போன்றவள். இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் இருக்கும் குழியால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்தது. அவளின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. இதேபோல், மற்றொரு நண்பரும் இதேபோன்ற விபத்தில் சிக்கி படுகாயத்தை சந்தித்தார். அன்றிலிருந்து சாலையில் இருக்கும் பள்ளங்களை சரி செய்வதை தொண்டாக ஏற்றுக் கொண்டேன் என கூறுகிறார்.

மேலும் இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, சாலையில் இருக்கும் பள்ளங்களால், சாலை விபத்துகளில் நாள்தோறும் சராசரியாக 30 பேர் உயிரிழக்கின்றனர் எனத் தெரிய வந்தது. இது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. முதலில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்த முயற்சி செய்தேன். அதில் பெரும்பாலும் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன். பின்னர் சாலை பள்ளங்கள் குறித்து புகார் அளிக்க ஒரு செயலியை உருவாக்கினேன். அந்த செயலியில் பதிவாகும் புகார்களின் அடிப்படையில் அந்த இடத்துக்கு சென்று, நானே அந்தப் பள்ளங்களை சரி செய்வேன். உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முய்றசி செய்தால், எந்த பதிலும் உடனடியாக கிடைக்காது. எச்சரிக்கை பலகை வைக்க எடுத்த முயற்சிகளும் கை கொடுக்கவில்லை. பள்ளங்களை சரி செய்வது மட்டுமே சரியான வழியாக இருந்ததால், பாத்ஹோல் ராஜா என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். அதன்மூலம் தன்னார்வலர்களை இணைத்து சாலைப் பள்ளங்களை சரி செய்து வருகிறேன். முதலில் சில சங்கடமான சூழல்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், மக்கள் தன்னார்வத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதையும் உணர முடிந்தது.

Also read... 26 வீல்கள், நீச்சல் குளம், ஹெலிபேட்... உலகின் மிக நீளமான காரை மறுசீரமைப்பு செய்யும் பணி தீவிரம்!

சில இடங்களில் பொது மக்களும் இணைந்து சாலைப் பள்ளங்களை சரி செய்வதற்கு உதவுகின்றனர். கடமை என்ற உணர்வுடன் இப்பணியை செய்யும்போது, மக்கள் அளிக்கும் பாராட்டு மற்றும் புன்னகை என்னை மேலும் இப்பணியை தொடர ஊக்குவிக்கிறது. இதுவரை 8,300க்கும் மேற்பட்ட பள்ளங்களை சரி செய்துள்ளனேன். இப்பணி இன்னும் தொடரும். இந்தியா முழுவதும் இருக்கும் சாலைப் பள்ளங்களை சரிசெய்வதே இலக்கு" எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: