பெங்களூருவில் போக்குவரத்து காவலர், இருசக்கர வாகனத்தில் சரியாக ஹெல்மட் அணிந்து வராத காவலருக்கு அபராதம் போட்ட செயலின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பெங்களூரு ஆர்.டி நகர் போக்குவரத்து காவலர் ஒருவர் சாலையில் பணியிலிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் சக காவல் துறை காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சரியான ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார்.
அதற்காக அவருக்குப் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்துள்ளார். இந்த சம்பவத்தின் புகைப்படத்தை ஆர்.டி நகர் போக்குவரத்து காவல்துறை அவர்களின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Good evening sir
half helmet case booked against police
Tq pic.twitter.com/Xsx5UA40OY
— R T NAGAR TRAFFIC BTP (@rtnagartraffic) October 17, 2022
காவலருக்கு அபராதம் விதித்த காவலரின் செயல் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அதே நேரம் இது எதார்த்தமாக நடக்காமல், போக்குவரத்து காவல் நாடகமாகச் செய்தது என்று விமர்சித்தும் வருகின்றனர்.
சாலை விதிகளை மீறுவது யாராக இருப்பினும் காவல் துறை அவர்களின் பணியைச் செய்து வருகின்றனர் என்று பாராட்டுகளும் குவிந்து வருகிறது. சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் சரியான மற்றும் பாதுகாப்பான தலைக்கவசங்களை அணிவது மிக முக்கிய தேவையாகவுள்ளது என்று காவல்துறை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Traffic Police, Traffic Rules, Viral News