பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!

பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!

மாதிரிப்படம்

தனது தாயின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தப் பணத்தை இழந்துள்ளார் ஷேக்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.

  பெங்களூருவைச் சேர்ந்தவர் ஷேக். ஐடி ஊழியரான இவர் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் ஒன்றில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்து ஒரு மணி நேரமாகியும் டெலிவரி வரவில்லை. இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்துப் பேசியுள்ளார் ஷேக்.

  தொலைபேசியில் பேசிய நபர், ஷேக்கின் உணவு ஆர்டர் ஹோட்டலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் செலுத்திய பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக ஷேக் தனக்கு வரும் ஒரு மெசேஞ் லிங்க்-ஐ க்ளிக் செய்ய வேண்டும் என்றும் அந்நபர் தேரிவித்துள்ளார்.

  இதையடுத்து தனக்கு வந்த லிங்க் ஒன்றை க்ளிக் செய்துள்ளார் ஷேக். அடுத்த சில நொடிகளிலேயே அவரது வங்கிக்கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் காலி ஆகியுள்ளது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த ஷேக் மடிவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  தனது தாயின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தப் பணத்தை இழந்துள்ளார் ஷேக். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமோ தங்களிடம் வாடிக்கையாளர் சேவை மையம் போன் மூலம் செயல்படுவது இல்லை. ஈமெயில் மற்றும் சாட்டிங் முறையில் மட்டுமே செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.

  உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவை மையத்தை செயலிகள் வழியாகவே தொடர்பு கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

  பொதுவாக கூகுளில் எண்களை தேடும் போது, தவறான எண்களை நீங்கள் தொடர்பு கொண்டு, போலியான நபர்களிடம் பணத்தை இழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தல்கள் இருக்கின்றன.

  மேலும் பார்க்க: ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி: வைரலாகும் வீடியோ!
  Published by:Rahini M
  First published: