ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இங்கு கிரிப்டோ கரன்சி ஏற்றுக் கொள்ளப்படும் - அசத்தும் டீக்கடைக்காரர்.!

இங்கு கிரிப்டோ கரன்சி ஏற்றுக் கொள்ளப்படும் - அசத்தும் டீக்கடைக்காரர்.!

கிரிப்டோ கரன்சி

கிரிப்டோ கரன்சி

Cryptocurrency | பெங்களூருவில் உள்ள “ஃபிரஸ்ட்ரேடட் ட்ராப் அவுட்” என்னும் டீக்கடையில் கிரிப்டோ கரன்சி முறையில் பணம் செலுத்தலாம் என்னும் அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore, India

ஆச்சரியங்களுக்கும் புதுமையான முயற்சிகளுக்கும் பெயர் போனது பெங்களூரு. படித்த இளைஞர்கள் வேலைக்காக குடியேறி பல புதுமையான விஷயங்களை நாள்தோறும் அங்கு அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் ‘ஃபிரஸ்ட்ரேடட் ட்ராப் அவுட்’ என்னும் டீ ஸ்டாலில் கிரிப்டோ கரன்சி முறையில் பணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட அந்த கடையும் அந்த அறிவிப்பும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுபம் ஷைனி என்பவர் தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு தொழில் துவங்க விரும்பியுள்ளார். “ஃபிரஸ்ட்ரேடட் ட்ராப் அவுட்” பெயரிடப்பட்டுள்ள டீ ஸ்டால் என்டர்பிரைசை பெங்களூருவில் துவங்கியுள்ளார்.

முதலில் கடை போன்ற அமைப்பை வாடகைக்கு எடுத்து அதில் டீ ஸ்டால் வைக்க வேண்டும் என்று விரும்பிய சுபம் சைனிக்கு அதை செய்ய தேவையான பண வசதி இல்லை. எனவே பெங்களூருவில் நடைபாதைகளில் மிக எளிமையான முறையில் டீக்கடை ஒன்றை வைத்துள்ளார். அதில் புது முயற்சியாக முடிந்த அளவு பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு குறைத்துள்ளார். அவர் கல்லூரியில் இருந்தபோதே கிரிப்டோ டிரேடிங்கில் ஈடுபட்டு கணிசமான லாபத்தை பெற்றுள்ளார்.

ஆனால் 2021 ஆம் ஆண்டு கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு அப்போதைக்கு அதிலிருந்து விலகி இருந்தார். தற்போது இந்த டீக்கடையில் நாம் ஏன் கிரிப்டோ கரன்சி முறையை பயன்படுத்தக் கூடாது என்று புது யோசனை தோன்றவே கிரிப்டோ கரன்சி முறையில் பணப் பரிவர்த்தனைகள் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதனை நடைமுறைபடுத்தியும் காட்டினார்.

இவ்வாறு கிரிப்டோமுறையில் பணம் பெற்றுக் கொள்ள துவங்கியதில் இருந்து அவரது வியாபாரமும் கணிசமாக உயர்ந்தது. ஒரு வாரத்திற்கு குறைந்தது 20 வாடிக்கையாளராவது கிரிப்டோ முறையில் பணம் செலுத்துவார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பேக்ஸ்புல் கிரிப்டோ பிளாட்பார்மை இந்த கிரிப்டோ பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறார்.

Also Read : தன் செலவுகளை கவனித்துக் கொள்ள ஆண் நண்பரை நியமித்த இளம்பெண் - இறுதியில் நடந்த ட்வீஸ்ட்

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிறகு இந்திய மக்கள் பலரும் குறிப்பாக, மெட்ரோ சிட்டிகளில் வாழும் மக்கள் பெரும் அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். இதனால் சுபம் ஷைனியின் இந்த கிரிட்டோ கரன்சி பணபரிவர்த்தனை முறையால் அவரின் டீ ஸ்டால் பெங்களூருவில் புகழடைந்து வருகிறது. நாடு முழுவதும் 22 இடங்களில் தன்னுடைய கிளைகளை தோற்றுவித்து சாதனை படைத்துள்ளார் சுபம்ஷைனி.

Also Read : படத்தில் முதலில் தெரிவது எது.? உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!

இவரது டீ ஸ்டாலை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, பலரது ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.

Published by:Selvi M
First published:

Tags: Bengaluru, Crypto currency, Tea Stall