Home /News /trend /

சிக்னலில் காத்திருந்தபோது மலர்ந்த காதல் - வைரலாகும் காவியக் கதை.!

சிக்னலில் காத்திருந்தபோது மலர்ந்த காதல் - வைரலாகும் காவியக் கதை.!

காதல் கதை

காதல் கதை

Trending | 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். இப்போது திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், 2.5 கி.மீ. தொலைவு கொண்ட அந்த மேம்பால கட்டுமானப் பணி இன்னமும் நடைபெற்று வருகிறது என அந்நபர் குறிப்பிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore, India
பெரும் மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து நெருக்கடி மற்றும் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிகழ்வுகள் எல்லாம் புதியது கிடையாது. பெரும்பாலும், இத்தகைய நிகழ்வுகளை கடக்காமல் பயணித்தால் தான் ஆச்சரியம்.

அதே சமயம், சிக்னல்களில் காத்திருக்கும் சமயத்தில் நம் மனம் வெவ்வேறு கோணங்களில் அலைபாய தொடங்கும். சிலர் அருகாமையில் உள்ள கடைகள், கட்டடங்கள் குறித்து நோட்டம் விடுவார்கள். சிலர் தன் மனதை சட்டென்று கவரும் கார் அல்லது பைக் போன்றவற்றை சில நொடிகள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதனுடாக, மற்றொரு குதூகலமான விஷயம் ஒன்றும் நடந்தேறும். ஒருசில விதிவிலக்குகளை தவிர்த்து நாம் எல்லோரும்கூட இந்த ரசனையை செய்பவர்கள் தான். சிக்னலில் வாகனங்களில் காத்துக் கொண்டிருக்கும் அழகான சக மனிதர்களை நம் கண்கள் சைட் அடித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், அந்த அழகான பெண் அல்லது ஆண் யார் என்று நமக்கு எந்த விவரமும் தெரியப்போவதில்லை. அதற்கு அடுத்த நொடி அவர்களை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. ஆனால், அந்த சமயத்தில் அழகை ரசிக்க தவறுவது கிடையாது.உண்மையை சொல்வதென்றால், அவசர, அவசரமாக நாம் பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த சிக்னல்களில் நிலவும் காத்திருப்பு காரணமாக நம் மனதில் எழும் எரிச்சல்களுக்கு தீர்வு தரும் விதமாக இந்த வேடிக்கையான விஷயங்கள் இருக்கும்.

Also Read : சாஃப்ட்வேர் மாப்பிள்ளைக்கு ‘நோ’.. டாக்டர்ன்னா ஒகே.. - வைரல் ஆகிய திருமண விளம்பரம்

ஆனால், சிக்னலில் காத்திருக்கும் சமயத்தில் ஒரு காதல் காவியம் மலர்ந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், பெங்களூரு மாநகரில் இந்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிக்னலில் காத்திருந்த சமயத்தில் தான் ஒரு பெண்ணை பார்த்து, காதல் மலர்ந்து, அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்ட கதையை ரெடிட் இணையதளத்தில் ஒரு நபர் விவரித்துள்ளார்.

அவரது பதிவில், “இந்தக் கதையை நான் ஏற்கனவே ஒருமுறை கூறியிருக்கிறேன். நான் என் மனைவியை முதன்முதலாக சோனி வோர்ல்டு சிக்னல் அருகே சந்தித்தேன். அவருடன் ஏற்கனவே கொஞ்சம் அறிமுகம் உண்டு என்பதால், அவர்களது வீட்டில் இறக்கிவிட அழைத்துச் சென்று கொண்டிருந்தேன்.அதே சமயம், மேம்பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் நாங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டோம். மிகுந்த எரிச்சல் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமல்லாமல் எங்கள் இருவருக்குமே மிகவும் பசிக்கத் தொடங்கியது. இதனால், வண்டியை திருப்பி அருகாமையில் உள்ள ஹோட்டலில் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தோம்.

Also Read : மான்கள் கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு மயில் - முடிந்தால் 15 வினாடிகளில் கண்டுபிடியுங்கள்.!

அதற்குப் பிறகு, காதல் மலர்ந்து 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். இப்போது திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், 2.5 கி.மீ. தொலைவு கொண்ட அந்த மேம்பால கட்டுமானப் பணி இன்னமும் நடைபெற்று வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது காதல் கதை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் தங்களுடைய காதல் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம், சோனி சிக்னல் அருகேயுள்ள அந்த மேம்பாலப் பணிகள் நிலுவையில் இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Bangalore, Trending

அடுத்த செய்தி