செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர் - இணையக் கொள்ளை!

செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர் - இணையக் கொள்ளை!

மாதிரி படம்

ஆட்டோ டிரைவரான அவரை செல்போனில் அழைத்த நபர்கள் செக்ஸ் மாத்திரையை வாங்குவதற்கான கூப்பனை வென்றுவிட்டதாகவும், அதற்கான வரியை செலுத்தினால் பணத்துடன் கூடிய மாத்திரைகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெங்களூருவில் செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ஆட்டோ டிரைவர் ஒருவர் 2.17 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாளுக்கு நாள் இணையக் கொள்ளையும் அதிகரித்து வருகிறது. ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்ற வசனம் இந்த நபருக்கு கச்சிதமாக பொருந்தும். ஆட்டோ டிரைவரான அவரை செல்போனில் அழைத்த நபர்கள் செக்ஸ் மாத்திரையை வாங்குவதற்கான கூப்பனை வென்றுவிட்டதாகவும், அதற்கான வரியை செலுத்தினால் பணத்துடன் கூடிய மாத்திரைகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

செக்ஸ் மாத்திரைகளுடன் பணமும் சேர்த்து கிடைக்கப் போகிறது என நம்பிய அந்த டிரைவரிடம், இணையக் கொள்ளையர்கள் சுமார் 2.17 லட்சம் ரூபாயை களவாடியுள்ளனர். தன் பணத்தை இழந்தபிறகே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை டிரைவரும் உணர்ந்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களுரு நகரை ஒட்டிய பெலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். அவரது செல்போனுக்கு அழைத்த மர்ம நபர்கள் காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசனை டிரைவர் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த மெடிசன் விலை பல லட்சம் ரூபாய் என கதையளந்த மர்மநபர்கள் அதனுடன் மிகப்பெரிய தொகை ஒன்றையும் வழங்குவதாக நம்பிக்கைக்குரிய வார்த்தைகளில் பேசியுள்ளனர். இரண்டு வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்ட நபர்கள், அவரை தங்களது சூட்ச திட்டத்தில் விழ வைத்துள்ளனர். அதாவது, அந்த தொகை மற்றும் மாத்திரைகளை பெற வேண்டுமென்றால் வரியாக (Tax) சில லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Also read... மைக்ரோஃபோன், வெப்கேம்-ஐ பயன்படுத்த ஆப்களுக்கு அனுமதி வழங்கும் 4-ல் ஒரு பங்கு மக்கள்...!

இதனை நம்பிய ஆட்டோ டிரைவர், இணையக் கொள்ளையர்கள் கேட்ட தொகையை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 2.17 லட்சம் ரூபாய் வரை அனுப்பிய அவருக்கு, செல்போனில் கூறியதுபோல் காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசன் மற்றும் பணம் ஆகியவை வரவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த டிரைவர், அருகில் இருந்த CEN காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அவருக்கு நிகழ்ந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இணையக் கொள்ளை தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்து டிரைவரை ஏமாற்றிய நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல், இணையக் கொள்ளை ஒன்று 2019 ஆம் ஆண்டு பெங்களுரு நகரில் அரங்கேறியது. தொழில்நுட்ப வல்லுநரான என்.வி.ஷேக் என்ற பெண், புட் செயலி ஒன்றில் ஆன்லைன் வழியாக உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், அவரது அக்கவுண்டில் இருந்து 95,000 ரூபாயை கொள்ளையடித்தனர். இது குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: