31 வயதான பெங்களூருவைச் சேர்ந்த சஜேஷ் , ஆதரவில்லாமல் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
தங்களுக்கு சொந்தமாக ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க போராடும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெருகி உள்ளது. இந்த ஆதரவற்ற நாய்களில் பெரும்பாலானவை நோய்களுக்கான சிகிச்சையின்மை காரணமாக அல்லது சாலை விபத்துக்களுக்கு ஆளாகுவதன் மூலம் இறக்கின்றன. பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினைகளை மேலோட்டமாக பேசியும், கண்டும் காணாமலும் இருந்து, காலப்போக்கில் அதை மறந்துவிடுவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பெங்களூரைச் சேர்ந்த 31 வயதான விலங்குகளை நேசிக்கும் சஜேஷ் என்பவர் தெருக்களில் திரியும் நாய்களின் நிலையை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் முடிவு செய்தார். ஒரு நிறுவனத்தில் பிராண்டிங் ஆலோசகராகப் பணிபுரிந்த எஸ். சஜேஷ், தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, ஆதரவற்ற நாய்களுக்கான ஆதரவாக மாறியுள்ளார் என்று யுவர்ஸ்டோரி கூறியுள்ளது.
இது அனைத்தும் 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. காயமடைந்த நாய்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அதன் தங்குமிடத்திற்கு கொண்டு செல்லவும் ஆம்புலன்ஸ் ஒன்றை சஜேஷ் வாங்கினார். அவர் முதலில் மீட்டது ஒரு கருப்பு நாய்க்குட்டி. ஆசிட் தாக்குதலால் அந்த நாய்க்குட்டிக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. சஜேஷ் அந்த நாய்க்குட்டியை யாராவது வளர்க்க முன்வருகிறார்களா என்று முயற்சி செய்தார், ஆனால் ஒருவரும் அந்த நாய்க்குட்டியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
Also read... புற்றுநோயால் உயிருக்கு போராடிய நாயை மகிழ்விக்க கடைசி ட்ரெக்கிங் கூட்டிச் சென்ற உரிமையாளர்!
தன்னையும், தோழனையும் ஓவியமாக வரைந்த 9 வயது யானை- ரூ. 4 லட்சத்துக்கு விற்பனையான ஓவியம்
அடுத்த நாட்களில் இதேபோன்ற பிரச்சினைகளை அவர் தொடர்ந்து எதிர்கொண்டார். விலங்குகளுக்கு நடக்கும் அட்டூழியங்கள் மிகப் பெரியவை என்பதை உணர்ந்தார். உதவி தேவைப்படும் நாய்களை நன்கு கவனித்துக்கொள்வதற்காக, தானே சொந்தமாக நாய் மீட்பு மற்றும் மறுவாழ்வு தங்குமிடம் தொடங்க, இந்த நிகழ்வு அவரைத் தூண்டியது. சஜேஷ் செப்டம்பர் 2017 இல் அனிமல் லைவ்ஸ் ஆர் இம்பார்ட்டன்ட் (ALAI) (விலங்குகளின் வாழ்வு முக்கியம்) என்ற அமைப்பை நிறுவினார்.
மிகவும் அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, இப்போது 300 க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் பசுக்கள் போன்ற பிற விலங்குகளை கவனித்துக்கொள்ளும் ஒரு தங்குமிடமாக மாறியுள்ளது. விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான ALAI, ஆதரவற்ற நாய்களை மீட்டு, நன்றாக பராமரித்து, போதுமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவியை அளிக்கிறது. இந்த நாய்களை மீட்கும் போது ரேபிஸ்-எதிர்ப்பு தடுப்பூசி அளவு உட்பட பல தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மக்களைச் சென்றடைந்த ALAI அமைப்பு, தற்போது, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 18 தன்னார்வலர்களுடன் செயல்படுகிறது. அனுபவம் வாய்ந்த மீட்புப் படையினர் ஆதரவில்லாத நாய்கள் இருக்கும் இடத்தைத் தேடி, அவற்றை பிடிப்பார்கள். பொதுவாக நாய்களைப் பிடிக்க வெறும் கைகளைப் பயன்படுத்துவார்கள். சில நேரங்களில், மூர்க்கமான நாய்களாக இருந்தால், வலைப் பயன்படுத்தப்படுகிறது. ALAI தன்னார்வலர்களில் மருத்துவர்கள், நிபுணர் நாய் பிடிப்பாளர்கள், நாய் பராமரிப்பாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் உள்ளனர்.
சஜேஷ் மனைவி ஸ்கைலாவும் அவருடன் இணைந்து செயலாற்றி வருகின்றார். ALAI, நிறுவனங்கள் வழங்கும் க்ரௌடுஃபண்டிங் மற்றும் CSR நிதி நன்கொடைகளை தன்னுடைய செலவினங்களுக்காக பயன்படுத்தி வருகிறது மற்றும் தற்போது நகரத்தில் விலங்குகளுக்காக இரண்டு தங்குமிடங்களை உருவாக்கியுள்ளது. இருப்பினும், ஆதரவற்ற தெரு நாய்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, பணிபுரியும் போது கூடுதல் இடங்களில் பணியாற்றுவதன் மூலம் அதிக நாய்களுக்கு உதவ விரும்புவதாக சஜேஷ் கூறுகிறார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending