ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஹெல்மெட் போடாததற்கு ஆதாரத்தை காட்டுங்க... சவால்விட்டு அசிங்கப்பட்ட வாகன ஓட்டி

ஹெல்மெட் போடாததற்கு ஆதாரத்தை காட்டுங்க... சவால்விட்டு அசிங்கப்பட்ட வாகன ஓட்டி

போக்குவரத்து காவல் வெளியிட்ட புகைப்படம்

போக்குவரத்து காவல் வெளியிட்ட புகைப்படம்

அபராதம் போட்டதர்க்கு ஆதாரம் கேட்ட நபரின் ஹெல்மட் அணியாத புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் சிரிப்பலைக்களை போக்குவரத்து காவல்துறை உருவாக்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  பெங்களூருவில் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய நபருக்கு அபராதம் விதித்து அபராத சீட்டு அனுப்பப்பட்டது. அதற்கு அவர், தான் ஹெல்மெட் அணிந்து தான் ஓட்டியதாக சமூக ஊடகத்தில் புகார் கூறியுள்ளார்.  அதற்கு உடனடியாக போக்குவரத்து துறை புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  பெங்களூருவில் பெலிக்ஸ் ராஜ் என்ற நபருக்குப் போக்குவரத்து காவல், ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக அபராதம் விதித்து சீட்டை அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு அவர், தான் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவது இல்லை என்று குறிப்பிட்டு விளக்கம் கேட்டு சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  மேலும், ஏற்கனவே ஒருமுறை தவறு செய்யாதபோதே தனக்கு அபராதம் கட்ட சொல்லி  அபராத சீட்டு அனுப்பப்பட்டதாகவும் அதனை கட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சரியான ஆதாரம் கொடுங்கள் இல்லையென்றால் வழக்கை நீக்குங்கள் என்று கூறியுள்ளார்.

  அந்த பதிவில் பெங்களூரு போக்குவரத்து காவலை டேக் செய்துள்ளார். சிறிது நேரத்திலேயே பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அதற்கு ஆதாரமாக அவர் சாலையில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

  தற்போது அந்த பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து காவல் ஆதாரமாகப் புகைப்படத்தைப் பதிவிட்டவுடன், அந்த நபர் ஆதாரத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் கேள்வி கேட்பதற்கான உரிமையுள்ளது என்று கூறியுள்ளார். விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

  Also Read : ஹெல்மெட் சரியில்ல... போலீஸ்க்கு அபராதம் போட்ட போலீஸ் - போக்குவரத்து காவலருக்குக் குவியும் பாராட்டு.

  இந்த சம்பவம் இணையத்தில் சிரிப்புப்பொருளாகவே மாறியுள்ளது. நெட்டிசன்கள், இப்படி காவல்துறையின் நேரத்தை வீணடிப்பவர்களுக்கு அபராதம் ஏதும் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே போல் சிலர், ஹெல்மெட் மட்டும் இல்லை அவர் தலையில் அணிந்திருக்கும் இசைக்கேட்கும் கருவிக்கும் சேர்த்து அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Traffic Police, Viral News